சிறைவாசிகள் விடுதலையும் முஸ்லிம்களின் கோரிக்கையும்!
ஆளுநரின் உச்சந்தலையில் அடித்தது போன்ற
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு...!
பேரறிவாளனைத் தொடர்ந்து...
ராஜீவ் கொலை வழக்கில்
30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி...!
தமிழக அரசின் பரிந்துரையினை கிடப்பில் போட்டுவந்த தமிழக ஆளுநருக்கும் குட்டுவைத்தது உச்சநீதிமன்றம்...!
நீண்ட கால சிறைவாசம் அனுபவித்து விடுதலையான அந்த தமிழர்களை வரவேற்கிறோம்,...!
விடுதலைக்கு வித்திட்ட தமிழக அரசுக்கும்,
அதற்காக நீண்ட நெடும் போராட்டத்தை முன்னெடுத்த பா.ஜ.க. தவிர்த்து அனைத்து கட்சியினருக்கும்,
நீதி வழங்கிய உச்சநீதிமன்ற நீதியரசர்களுக்கும் நன்றிகள் பல...!
இந்த நீதி,
இதே நீதி...
நீண்ட காலமாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கும் கிடைக்கவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை!
மேலே நன்றி கூறிய அனைவரும் அதற்காக சமநீதியுடன் நடந்துகொள்ளவேண்டும்.
களமாடவேண்டும்.
* - அச.உமர் பாரூக்




Comments
Post a Comment