ஐ. எப். டி.யின் குழந்தைகளுக்கான நூல்கள் வெளியீடு!
சென்னை: இஸ்லாமிய நிறுவனம் ( ஐ. எப். டி.) சார்பில்
மதீனாவின் கிங் ஃபஹத் குளோரியஸ் குர்ஆன் பிரிண்டிங் காம்ப்ளக்ஸ்,
மொழிபெயர்ப்பு மையத்தின் இயக்குநரும்
முதுபெரும் அரபு மொழி அறிஞருமான
டாக்டர் வி. அப்துர் ரஹீம்
எழுதிய குழந்தைகளுக்கான நூல்கள்
( ஆங்கிலம் மற்றும் தமிழ் ) வெளியிடப்பட்டன. ஐ.எப். டி. பொதுச் செயலாளர் எச். அப்துர் ரகீப் சாஹிப் தலைமையில், நூலாசிரியர் முன்னிலையில், வண்டலூர் பி. எஸ். அப்துல் ரஹ்மான் கிரெசென்ட் பல்கலைக்கழக அரபி மொழி மற்றும் இஸ்லாமிய கல்வித்துறை தலைவர் பேராசிரியர் பி. எஸ். சையத் மசூது ஜமாலி, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பொருளாளர் எம்.ஜே.ஜமால் முஹம்மது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி தேசிய தலைவி பாத்திமா முஸப்பர் எம்.சி. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் ஐ.எப்.டி. துணை தலைவர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது, மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். எழுத்தாளர் அஜீஸ் லுத்புல்லாஹ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.





Comments
Post a Comment