நூல் அறிமுகம்: எலான் மஸ்க் - கார்த்திக் ஸ்ரீநிவாஸ்

டுவிட்டர் நிறுவனம் வாங்கப்பட்டவுடன் உலகில் இன்று அநேகமானவர்களின் தேடலுக்கு உரித்தான ஒருநபர் எலான் மஸ்க். தனி மனிதராக நின்று *ஜிப் 2, பே-பால், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பனி, ஹைப்பர்லூப், ஒப்பன் ஏஐ , சோலார் சிட்டி, கிகா ஃபேக்டரி ஆகிய நிறுவனங்களை வளர்த்தெடுத்து இன்று அதிகாரப்பூர்வ சமூகவலைதளமான டுவிட்டர் நிறுவனத்தையும் நிர்வகிக்கிறார். உலகின் அதிக தேடலுக்கு பெயர்பெற்ற கூகுள் நிறுவனத்திற்கு போட்டியாக , இல்லை இல்லை கூகுளையே யே சாப்பிடும் அளவிற்கு மென்பொருள்களை கொண்டு தனது புதிய தளங்களை விரிவுபடுத்திட கருதும் போக்கை உலகமே மிரட்சியுடன்தான் காண்கிறது. உலக வரலாறானது 'மாற்றம்' என்ற ஒற்றை சொல்லுக்குள் அடக்கிவிடும் போக்கை கொண்டது. அப்படி தான் இன்று நம் சமூகத்தின் கைகளில் தவழும் பெரும்பான்மையான வஸ்துக்கள் கால மாற்றத்தின் சிந்தனை, தத்துவார்த்தம், அரசியல், தலைவர்கள், தொழில் அதிபர்கள், விஞ்ஞானிகள் முதலானவர்கள் மாற்றத்தின் மூலம் உருவானவர்கள். இப்படியான "மாற்றங்களுக்கு" மத்தியில் உருவான வஸ்துக்களை இருபிரிவினர் விமர்சிக்கின்றனர் . ஒன்றாவது : 'உலகமயமாதல்' என்ற விதியில் விளைந்த ஒன்று. இரண்டாவது : ஒன்றை அழித்து இன்னொன்று வந்திருக்கின்றது என்ற விதி மனப்பான்மை. அப்படி முதல் தரப்பினரில் ஒருவர் நினைப்பது போல 'உலகமயம்' என்னும் மந்திரக்கோலால் வெவ்வேறு காலகட்டங்களில் புதிய கண்டுப்பிடிப்புகள் தோன்றின. ஆனால்..... இரண்டாம் தரப்பினர்கள் கூறுவதை போல் இதுவரை அழிவிற்குப் பயன்படாத எந்த அறிவியல் கண்டுபிடிப்புகளும் இல்லை என்ற சமூக பார்வை. *ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நல்ல விளைவுகளை மட்டுமே தரக்கூடிய மாற்றங்களை உருவாக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் இன்று எலான் மஸ்க்கின்* இலக்குகளை உலகமே "எலான்' மயமாக்குதல் என்ற பாதையில் ஒற்றை கார்ப்ரேட் அடாவடிக்குள் திழைத்திடுமோ என்ற பருந்துப் பார்வை தரிசனம்தான் இந்தப் புத்தகம்!* *விலை : ₹211* *தொடர்புக்கு : ஹாஜா நவாஸ் WhatsApp / TeleGram / Signal : *9176277692* ********************** *நமது செய்தி* இணைய தளத்தில் செய்திகள், நூல் அறிமுகம், விளம்பரம் முதலான தொடர்புகளுக்கு வாட்ஸ் அப் எண்: 9841520645 கைபேசி எண்: 9043490118 namathuseythi.blogspot.com

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!