விடுபட்டவர்கள் துயரத்தில்! பத்திரிகையாளர் ஓய்வூதியம் குறித்து டி. யூ. ஜே. கோரிக்கை !

சென்னை: பத்திரிகையாளர் ஓய்வூதியம், இதழாளர் நல வாரிய கோரிக்கைகளை முன் வைத்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ( டி யூ ஜே ) தலைவர் தோழர் புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: அச்சு மற்றும் காட்சி ஊடக அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும், பத்திரிகையாளர்கள்நலவாரியதில் உறுபிப்பினராக சேரலாம் என்கிற அரசு அறிவிப்பை T.U.J.வரவேற்பதுடன்,இதய பூர்வ நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது. பத்திரிகையாளர்கள் நலன் கருதி,கீழ்காணும் கோரிக்கைகளை நிறை வேற்றிட,உரிய நடவடிக்கை களை துரிதமாக மேற்கொள்ளவேண்டும் என தமிழக அரசை T.U.J. அன்புடன் கோருகிறது. ஊரக பத்திரிகையாளர்களை, அங்கீகரித்து,ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து,உரிமைகள்,சலுகைகள் வழங்கப்படவேண்டும் என கடந்த 32 ஆண்டுகளாக, T.U.J. தமிழக அரசிடம்பல கோரிக்கை களை வைத்து வாதாடியும்,போராடியும் வந்துள்ளது. தற்போது அரசு அதை ஏற்றுக்கொண்டு,ஊடக அலுவலகங்களில் (Media House) பணிபுரியும்,அனைத்து ஊழியர்களையும் (Including Non journalist) பத்திரிகையாளர்கள் நலவாரியதில் உறுப்பினராக சேர்ப்பது என்று முடிவெடுத்து நலவாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டதற்காக T.U.J. முழுமனதுடன் வரவேற்பதுடன்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கும்,நலவாரிய உறுப்பினர்கள்,செய்தித்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து வாரியக் குழுவினருக்கும் இதயபூர்வ நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, நலவாரியத்தில் உறுப்பினர்கள் சேர்ப்பு ஆரம்பம், 1) முதல் கட்டமாக, அரசு அங்கீகார அட்டை (Govt Accredition Card) 2) அரசு பத்திரிகை அடையாள அட்டை (Govt Press pass) உள்ளவர்கள் மட்டும் கணக்கெடு்க்கப்படுவார்கள் என்கிற செய்தித்துறை அறிவிப்பு, தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிருப்தியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. எனவே நம் சங்கசார்பில், இந்த கணக்கெடுப்புக்கு நலவாரியத்தால் பொறுப்புத் தரப்பட்ட தனி அலுவலர், செய்தித்துறை துணை இயக்குனர் திரு. ஷண்முகம் அவர்களிடம் நான் தொடர்புகொண்டு,பத்திரிகையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பம், விரக்தி குறித்து விரிவாக எடுத்துக் கூறி, இதனால் நலவாரியத்தின் நோக்கம் நிறைவேறாது என்றும் உடனடியாக பத்திரிகையாளர்களை, குறிப்பாக எந்த உரிமையும் சலுகையும் இல்லாமல், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிபவர்களின் அவலத்தை தெளிவாகவும்,அழுத்தமாகவும் எடுத்து கூறினோம். இந்த நிலையில்,உடனடியாக நலவாரியகூட்டம் கூட்டப்பட்டு, நாம் வலியுறுத்திய கோரிக்கைகள் ஏற்கப்பட்டு,அதற்கு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளதையும், பத்திரிகையாளர்கள் அல்லாத (Nonjournist) தொழிலாளர்களையும்,வாரியம் அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டதை T.U.J. முழுமனதுடன் வரவேற்கிறது. மேலும் தொலைகாட்சியில் பணிபுரியும் செய்தியாளர்கள் ஊதியக்குழு வரம்பிற்குள் வராததால், அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க இயலவில்லை என்று நலவாரியம் கூறியுள்ளது வேதனையாக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக காட்சி ஊடகம், உலகம் முழுவதும் தங்கள் செய்திகளால் கொடிகட்டிப் பறக்கிறது. உலகம் முழுவதும் உள்ள செய்திகளை நம் வரவேற்பு அறையிலிருந்தே பார்க்கிறோம். தமிழகத்தில் காட்சி ஊடகம் வந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி கள் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும், தனியார்களும் ஏகப்பட்ட,தேசிய சேனல்களும் தினசரி தங்கள் செய்திகள், நிகழ்ச்சிகளை ஒளி பரப்பு செய்து வருகின்றன. இது மட்டுமல்லாது, புயல், மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் குறித்தும், மழை புயல் குறித்த எச்சரிக்கைகளை வெளியிட்டு, லட்சக்கணக்கான மக்களை பாதுகாக்கும் பணிகளை செய்து நம் அன்றாட வாழ்வின் அங்க மாகிவிட்ட தொலைகாட்சிகளில் பல்லாயிரம் செய்தியாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள். எனவே தமிழக அரசு இந்தியாவிற்கே முன்மாதிரியாக - வரும் குளிர்கால கூட்டத் தொடரில், காட்சி ஊடகங்களை ஊதியக்குழு வரம்பிற்குள் கொண்டு வர சட்டம் இயற்றுவதுடன்,தமிழக தில் உள்ள, நாடாளுமன்ற இரு அவையின் உறுப்பினர்களைக் கொண்டு ஊதியக்குழுவில் ஊடகங்களை சேர்க்கவும், "பிரஸ்கவுன் சில்" என்கிற அமைப்பை "மீடியா கவுன்சில்" என்று பெயர் மாற்றம் செய்ய இந்தியாவிற்கே வழிகாட்டியாக செயல்பட வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை T.U.J. வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. நலவாரியத் தின் முக்கிய பணியே இதர உடல் உழைப்பு நலவாரியம் 18 எப்படி இயங்குகிறதோ, அதே அடிப்படையில், உறுப்பினர்களை பதிந்து, சரிபார்ப்பு பணிகளை செய்வதே முழுநேரப்பணியாகும். அதற்கே முழு நேரத்தையும், நலவாரியகுழு செலவிட்டால், பத்திரிகையாளர்களின் பல தலைமுறை வாழ்த்தும். தற்போது ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்து கிடைக்காமல் போனதால் பலர் உயிரிழந்துள்ள அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த அவலத்தைப் போக்க, உடனடியாக கலைக்கப்பட்ட ஓய்வூதியக் குழுவை மீண்டும் அமைத்து, அதில் ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்த அனுபவமிக்க பத்திரியாளர்களுடன், கூடுதலாக, அனுபவமிக்க பத்திரிகையாளர்களை இணைத்து, புதிதாக ஓய்வூதியக் குழுவை அமைத்து, 3 மாதத்திற்கு ஒருமுறை குழுகூடி, ஓய்வூதிய விண்ணப்பங்களை பரிசீலித்தால்,வயதான பத்திரிகை யாளர்களின் இறப்பு அவலத்தை தவிர்க்கலாம். மேலும்,ஓய்வூதியத் திட்டத்தை, கலைஞர் முதல்வராக இருந்த 1997 மார்ச் பட்ஜெட்டில் சட்டத்திருத்தம் மூலம் அறிமுகப்படுத்தி 25 ஆண்டுகள், (கால் நூற்றாண்டு ) முடிந்த பிறகும்,300 பேர்களுக்குள் தான் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது என்ற அவலத்தை, கலைஞரின் வாரிசான முதல்வர் மு. க. ஸ்டாலின் காலத்தில் இதை முறியடித்து, விண்ணப்பித்த தகுதி தகுதி வாய்ந்த "அனைவருக்கும் ஓய்வூதியம்" வழங்கி சாதனை படைக்க முன்வருமாறு,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களையும் T.U.J.அன்புடன் கோருகிறது. ஓய்வூதியம் பெறத் தடையாக உள்ள "குடும்ப ஆண்டு வருமானம்" என்பதை தளர்த்தி "விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் போதும்" என்ற புதிய விதியைக் கொண்டுவந்தால், எஞ்சிய 3 ஆண்டுகளில், தமிழக அரசு ஓய்வூதியம் பெற காத்துக்கொண்டு இருக்கும் வயதான பத்திரிகையாளர்கள் மனம் குளிர்ந்து வாழ்த்துவார்கள். மேலும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஓய்வூதிய குழுவால் பரிந்துரைக்கப்பட்டு,செய்தித்துறை தெரிவு பட்டியலில் பெயர் வெளியிடப்பட்ட, மணிச்சுடர் நாளிதழில் பணிபுரிந்து,ஓய்வு பெற்ற சகோதரர் ஜே.மீரான்மைதீன் பெயர் அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய 41 பேரில் விடுப்பட்டு விட்டது. எனவே அவருக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க ஆவன செய்யுமாறும், மேலும் ஓய்வூதியம் பெற்று வந்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எய்திய, பிரபல பத்திரிகையாளர், எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர் தீக்கதிர் நாளிதழ் ஆசிரியர் குழுவில் 30 ஆண்டுகள் பணியாற்றிய R.பெரியசாமி அவர்களின் துணைவியார் திருமதி. சாந்தி பெரியசாமி, உரிய ஆவணங்களை சமர்ப்பித்தும், கடந்த ஓர் ஆண்டாக அலைக்கழிக்கப்படுகிறார். இவர் பிரபல சுதந்திரப் போராட்ட வீராங்கணை திருமதி. மீனாள் கிருஷ்ணசாமி அவர்களின் மகளாவார். எனவே இவர்கள் பிரச்சினையை சிறப்பு நேர்வாக கருதி, செய்தித்துறை அமைச்சர் அவர்கள் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் கிடைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு T.U.J. மாநிலத் தலைவர் P.S.D. புருஷோத்தமன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!