சேவையும் மத நல்லிணக்கமும்!

குஜராத்தில் தொங்கு பாலம் கீழே விழுந்து சுமார் 150 பேர் பாலியாகி விட்டனர். 27 ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் பிஜேபி அரசு பழுதடைந்த பாலத்தை கடந்த மாதம் செப்பனிட்டு அவசரம் அவசரமாக பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. அதற்கான தரச் சான்று அனுமதி பெறாத நிலையில் சட்டமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு திறந்து வைக்கப்பட்டதால் கடந்த அக்.30ல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு பாசிச சக்திகள் துன்பம் இழைத்தபோதும் முஸ்லிம்கள் அனைத்து சமூகத்தினரையும் சகோதரர்களாகத் தான் பாவிக்கிறார்கள். அந்த வகையில் பல சேவைகளைச் செய்து வருகிறார்கள். குஜராத் மோர்பி பால விபத்தில் தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் 50க்கும் மேற்பட்ட உயிர்களை ஹுசைன் மெஹபூப் பதான் என்பவர் காப்பாற்றியுள்ளார். அதனை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். சமூக வலைதளங்களில் அவரது படம் பகிரப்பட்டு வருகிறது.
இதுபோன்ற நற்செயல்களை முஸ்லிம்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். மத நல்லிணக்கத்துக்கு முன்னோடியாக திகழ வேண்டும்.

Comments

Popular posts from this blog

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

மணிப்பூர் 2 பழங்குடி பெண்கள் பாலியல் வன் கொடுமை: உச்ச நீதிமன்றம் கண்டனம்!