அமீரகத்தில் பாரதியார் கவிதைகள் அரபு மொழிபெயர்ப்பு வெளியீடு!
துபை: சென்னைப் பல்கலைக்கழக அரபுத்துறைப் பேராசிரியர் முனைவர் அ. ஜாகிர் ஹுசைன் தமிழிலிருந்து அரபியில் மொழியாக்கம் செய்துள்ள பாரதியார் கவிதைகள்
06.11.2022 அன்று துபை அல்ஜதாஃப் ஹில்டன் டபுள் ட்ரீ நட்சத்திர ஹோட்டலில்
அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் குழுமம் ஒருங்கிணைத்த நிகழ்வில் வெளியிடப்பட்டது.
அமீரகத்தின் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் அரசு செயலாளர் ஹெஸ்ஸா தெஹ்லக் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.
அமீரக எழுத்தாளர் அஸ்மா அல் ஸர்வூனி மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் தொழிற்நுட்ப ஆலோசகர் சயீத் அப்துல்லா முதல் மற்றும் இரண்டாவது பிரதிகளைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
பேராசிரியர் ஜாகிர் ஹுசைன் தனது ஏற்புரையில், தமிழர் - அரேபியர் உறவு குறித்தும் தனது மொழியாக்க அனுபவம், பாரதியார் கவிதைகள் அரபு மொழியாக்கம் உருவான பின்னணி குறித்தும் எடுத்துரைத்தார் .
எழுத்தாளர் ஆசிப் மீரான் வரவேற்புரை நிழ்த்தினார். கேலக்ஸி பதிப்பகத்தின் பாலாஜி பாஸ்கரன் நன்றியுரை வழங்கினார். எழுத்தாளர் ஜெஸிலா பானு நிகழ்ச்சியைத் தொகுத்தார்.
அமீரக அரசு அதிகாரிகளும் அரபு எழுத்தாளர்களும் பாரதியார் கவிதைகள் அரபு மொழியாக்கத்தை வெகுவாகப் பாராட்டினர் .
பேராசிரியர் ஜாகிர் ஹுசைன் செய்திருக்கும் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது இந்திய அமீரக உறவை வலுப்படுத்தக் கூடிய சிறப்பான பணி என்று பாராட்டினர் .
பேராசிரியர் ஜாகிர் ஹுசைன் ஏற்கனவே திருக்குறளையும் அவ்வையின் ஆத்திசூடியையும் அரபியில் மொழியாக்கம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment