இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா ஆலோசனைக் கூட்டம்!
சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75ஆம் ஆண்டு பவள விழா தேசிய மாநாடு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு தொடர்புடைய கட்சியின் 9 மாவட்டங்கள் பங்கேற்ற இந்தக்
கூட்டத்திற்கு தேசிய தலைவர் முனீருல் மில்லத் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் தாங்கினார்.
மாநில துணை செயலாளர் இப்ராஹிம் மக்கி கிராஅத் ஓதினார். பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் வரவேற்றார். பொருளாளர் ஷாஜஹான், முதன்மை துணை தலைவர் - தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அல்ஹாஜ் அப்துல் ரஹ்மான், துணை தலைவர் நவாஸ்கனி எம். பி., மாநில செயலாளர்கள் காயல் மகபூப், வழக்கறிஞர் ஜீவகிரிதரன், நிஜாமுதீன், துணை செயலாளர்
ஆப்பனூர் ஜபருல்லாஹ், மகளிர் அணி தேசிய தலைவர் பாத்திமா முசப்பர், கே. எம். சி. சி. பொதுச்செயலாளர் சம்சுதீன் அபூபக்கர், இளைஞர் அணி பொதுச்செயலாளர் அன்சாரி மதார், மாணவர் அணி மாநில தலைவர் பழவை அன்சாரி ஆகியோர் உரையாற்றினர்.
தேசிய மாநாட்டிற்கு மாவட்டம் முழுவதும் வரவேற்பு குழு உறுப்பினர்கள் சேர்ப்பது என்றும் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளை அழைப்பது என்றும் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments
Post a Comment