துபையில் தப்ஸீர் அஷ்ஷஃராவீ நூல் வெளியீட்டு விழா!

லால்பேட்டை துபை ஜமாஅத் நடத்திய மீலாது விழா மற்றும் தப்ஸீர் அஷ்ஷஃராவீ நூல் வெளியீட்டு விழா 6-11-2022 அன்று துபை தேரா பணியாஸ் ஸ்கொயர் மெட்ரோ அருகிலுள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற்றது. மௌலவி இனாமுல்லாஹ் கிராஅத் ஓதினார். ஜமாஅத்தின் துணைத்தலைவர் ஏ. ஆர். ரியாஜூல்லாஹ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஜமாஅத்தின் முன்னாள் செயலாளர் எஸ். எச். ஹாஜா மைதீன் வரவேற்புரையாற்றினார். லால்பேட்டை துபை ஜமாத் தலைவர் ஹாஜி எம். ஏ. ஆசிக் அலி, சிங்கப்பூர் ஹவுஸ் நிறுவனர் 'என்பவுல் ஹைராத்' மௌலவி பி. ஏ. ஜாபர் அலி மன்பயீ, கீழக்கரை 'முஹிப்புல் உலமா' முஹம்மது மஃரூஃப் காகா, ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தப்ஸீர் அஷ்ஷஃராவீ தமிழாக்கம் நூலின் முதல் பிரதியை மௌலவி எம். ஒய். முஹம்மது அன்சாரி மன்பயீ, மௌலவி பி. ஏ. ஜாபர் அலி மன்பயீ ஆகியோர் வெளியிட ஜமாஅத் தலைவர் ஹாஜி எம். ஏ. ஆசிக் அலி, முன்னாள் தலைவர் எஸ். எம். முஹம்மது ஆசிக் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். இரண்டாம் பிரதியை மௌலவி M.Y முஹம்மது அன்சாரி மன்பயீ, முஹம்மது மஃரூஃப் காகா ஆகியோர் வழங்க, லால்பேட்டை பக்கீர் முஹம்மது, ஹிப்பத்துல்லாஹ் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். மூன்றாம் பிரதியை மௌலவி M.Y முஹம்மது அன்சாரி மன்பயீ, தஹியா டிராவல்ஸ் உரிமையாளர் எம். ஏ. ஆசிக் அலி ஆகியோர் வழங்க முன்னாள் தலைவர் S.ஜர்ஜீஸ், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். மௌலவி M.Y முஹம்மது அன்சாரி அவர்களுக்கு ஜமாஅத்தின் பொருளாளர் ஏ. ஆர். ரபியுல் அஹமது, துணை பொருளாளர் ஆர். பி. முஹம்மது பத்தாஹ் ஆகியோரும், மௌலவி பி. ஏ. ஜாபர் அலி மன்பயீ அவர்களுக்கு ஜமாத்தின் துணை செயலாளர் எம். டி. குதுரத்துல்லாஹ் மற்றும் ஜமாஅத் முன்னாள் துணைத்தலைவர் நஜீர் அஹமது ஆகியோரும், முஹம்மது மஃரூஃப் காகா அவர்களுக்கு ஜமாத்தின் மூத்த நிர்வாகிகள் முஹம்மது புஹாரி, S.M முஹம்மது அனஸ், பைஜி ஆகியோரும் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். தப்ஸீர் அஷ்ஷஃராவீ மொழி பெயர்ப்பாளர் மௌலானா மௌலவி M.Y முஹம்மது அன்சாரி மன்பயீ மீலாது நபி மற்றும் தப்ஸீர் அஷ்ஷஃராவீ நூல் குறித்து சிறப்புரையாற்றினார். அவரின் உரையில் லால்பேட்டை துபை ஜமாஅத்தின் ஆரம்பக்கால வரலாறு மற்றும் தற்போதைய சமூகப்பணிகள் குறித்து பெருமிதம் தெரிவித்தார். அவருக்கு லால்பேட்டை துபாய் ஜமாத்தின் சார்பில் 'துபாய் புர்ஜ் கலீபா கேடயம்' வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஜமாத் செயலாளர் இசட். பயாஜ் அஹமத் நன்றியுரையாற்றினார்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!