ஜி 20 மாநாடு: அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்!

புதுடெல்லி: ஜி 20 மாநாடு தொடர்பாக அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். இந்தியா ஜி 20 அமைப்பு மாநாடுக்கு தலைமை ஏற்பதை முன்னிட்டு டெல்லியில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு. க. ஸ்டாலின் பேசுகையில், பருவ நிலை மாற்றம் தொடர்பான இந்தியாவின் இலக்குகளை அடைய தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கும் என்று குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே. எம். காதர் மைதீன், திமுக எம்பி டி. ஆர். பாலு, கம்யூனிஸ்ட் தலைவர்கள் பிரகாஷ் காரத்,
டி. ராஜா, அ. தி. மு. க. சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!