சோழர் கால தமிழ் எழுத்து கல்வெட்டுகளை வாசிப்பது எப்படி?
சோழர் கால தமிழ் எழுத்து கல்வெட்டுகளை வாசிப்பது சற்று எளிதுதான். கொஞ்சம் முயற்சியும் ஒரு வாரப் பயிற்சியும் இருந்தால் போதும். எளிதாகத் தமிழ் கல்வெட்டுகளை வாசித்து விடலாம்.
** அட்டவணையில் தமிழ் கல்வெட்டுகள் அனைத்தும் உள்ளன. நன்கு கவனித்து உள்வாங்கி நாளொன்றுக்கு 5 தடவை எழுதி எழுதி ஒரு வாரம் பயிற்சி செய்தால் நிச்சயமாக சோழர்கால கல்வெட்டுகளை எளிதாக வாசிக்க முடியும்.
** பயிற்சியைத் துவங்குமுன் ஒரு சில குறிப்புகளை நினைவில் கொள்ளவும்.
" அ " முதலான உயிர் எழுத்துக்கள் ஏறக்குறைய தற்காலிக வடிவம்தான்.
' இ ' எழுத்து மட்டும் எண் 3 போல் இருக்கும். எ ,ஏ மற்றும் ஒ ,ஓ இரண்டுக்கும் ஒரே ஒரு எழுத்துத்தான்.
'க ' வரிசை எழுத்துக்கள் தற்கால வடிவம்தான். " கை" எழுத்தை " ளக" என்று படிக்கும் அபாயம் உண்டு.
சற்றுக் கவனம் தேவை.
" ங " வரிசை கூர்ந்து கவனிக்க. ஙு என்பது பு எழுத்துப் போல் தோன்றும்.
"ச " வரிசையில் சு, சூ இரண்டும் ஒரே எழுத்துபோல் இருக்கும்.
"ட. வரிசையில் டு என்பது தற்கால ரு எழுத்துப்போல் இருக்கும்.
"ண " வரிசையில்" ணெ" என்பது "ளெ" போல் இருக்கும். மூன்று சுழியை கவனிக்க.
"த" வரிசையில்..
** த ,தா,தி, தீ என்பது தற்கால க,கா, கி, கீ எழுத்துக்கள் போல் இருக்கும். நன்கு கவனிக்கவும்.
"ந" வரிசையும் தற்கால
"க" வரிசைபோல் இருக்கும்.
"ப " வரிசை தற்கால வடிவம்தான்.
"ம" வரிசை "ப " வரிசை போல் ஒத்திருக்கும்.
" மு " என்பது" ழு "போல் இருக்கும்.
ய ,ர ,ல ,வ ..
தற்கால வடிவம் போலவே இருக்கும்.
"ழ" வரிசை .. "ழு" என்பது
"மு" போல் இருக்கும்.
ற ,ன தற்கால வடிவம்தான்.
இதை நினைவில் கொண்டு பயிற்சி செய்தால் கல்வெட்டுகளை வாசிக்கலாம்.
குழந்தைகளிடத்தில் இதை சொல்லுங்கள். அவர்கள் வெகு விரைவாக கற்றுக்கொள்வார்கள்.
அனுபவத்தில் கண்ட உண்மை.
** பயிற்சி செய்த பிறகு கல்வெட்டுப் புகைப்படங்களைப் பார்த்து வாசியுங்கள். தஞ்சை பெரியகோவிலுக்குச் சென்று நேராகவே கல்வெட்டை வாசிக்கலாம்.
** - மா.மாரிராஜன்.
( இந்த எழுத்து அட்டவணையை உருவாக்கிய இளைஞர்
உலகளாவிய இளந்தமிழர் குழு - வேல்கடம்பன் ஆவார்.
இந்த அட்டவணையை கற்று 90 விழுக்காடு தமிழ் எழுத்துக்களை வாசிக்கலாம். 10 விழுக்காடு கிரந்த எழுத்துக்கள் இருக்கும்.
அதை வாசிக்கவும் ஒரு அட்டவணை தயாராகிறது)

Comments
Post a Comment