உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பதவியேற்பு!

சென்னை: தமிழ்நாடு புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு. க. ஸ்டாலின், அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், தமிழக எம் எல் ஏக்கள், எம்பிக்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஆளுநர் ஆர். என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கே. என். நேரு, கே கே எஸ் எஸ் ஆர் ராமசந்திரன், பொன்முடி, பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மற்றும் கனிமொழி எம்பி, தயாநிதி மாறன் எம்பி மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை விளையாட்டுத் தலைநகராக ஆக்குவதற்கு முயற்சி செய்வேன் என்று பேட்டியில் தெரிவித்தார். உதயநிதியின் மனைவி பெயர் கிருத்திகா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். முதல்வர் - திமுக தலைவர் மு. க. ஸ்டாலின்- துர்கா தம்பதியின் மகனான உதயநிதி ( வயது 45 ) பி.காம் படித்துள்ளார். திரைப்படத் தயாரிப்பாளராக - நடிகராக உள்ள அவர் திமுக இளைஞர் அணிக்கு தலைமை வகித்தார். முரசொலி நாளிதழ் நிர்வாகத்தையும் கவனித்து வந்தார். கடந்த தேர்தல்களில் கட்சிக்காக தமிழகம் முழுவதும் தீவிர பரப்புரை மேற்கொண்டார். மக்களோடு உரையாடி அவர் பரப்புரை செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு எம் எல் ஏ ஆனார். தொகுதி பணிகளில் அக்கறையோடு ஈடுபட்டு மக்களின் அன்பைப் பெற்று வருகிறார். கட்சியின் இளைஞர் அணி பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது துடிப்பான செயல்பாட்டைக் கருதியே கட்சி பிரமுகர்கள் - தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் பொறுப்பை முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!