இலங்கையில் நபிகள் நாயகம் ( ஸல் ) நூல் வெளியீடு!
கொழும்பு: இலங்கை முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்த - பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எழுதிய 'நபிகளாரின் சமூக உறவு' நூல் வெளியீட்டு விழா கொழும்பு நகரில் கலாபூஷணம் என். எம். அமீன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தனராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். முதல் தூதர் இறங்கிய இலங்கை மண்ணில் இறுதி தூதர் குறித்து விளக்கும் நூல் வெளியிடப்படுவது மிகவும் பொருத்தமானது என்று அவர் குறிப்பிட்டார்.
நூலாசிரியர்
ம.ம.க. தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் ஏற்புரை ஆற்றினார்.
இலங்கை சுற்றுப் பயணத்தில் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் தெஹிவளையில் நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பேராளர் மாநாட்டிலும் பங்கேற்றார். முன்னாள் அமைச்சர் அமீர் அலி, ரிசாட் பதியுதீன் மற்றும் பலர் பங்கேற்றனர்.


Comments
Post a Comment