புனித உம்ரா முடித்து சென்னை வந்த வக்பு வாரிய தலைவருக்கு வரவேற்பு!
சென்னை :
புனித உம்ரா பயணம் மேற்கொண்டிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில முதன்மை துணைத்தலைவரும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான முன்னாள் எம். பி. அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் 18.12.2022 ஞாயிறு இரவு 7.30 மணிக்கு சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் வக்பு வாரிய தலைமை வழக்கறிஞர் காஜா முகைதீன் ஜிஸ்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பி. மீராசா மரைக்காயர், சேலம் மாவட்ட முன்னாள் தலைவர் A.K. நசீர் அஹமது, சேலம் ஜாமிஆ பள்ளி முத்தவல்லி எஸ். ஆர். அன்வர், சிதம்பரம் முஹம்மது அலி, செல்லப்பா என்ற ஜியாவுதீன், தலைமை நிலைய பேச்சாளர் கொள்ளிடம் ரசீத் ஜான், கள்ளக்குறிச்சி முத்தவல்லி இக்பால் ஹாஜியார், திருச்சி நத்ஹர் வலி தலைமை அறங்காவலர் அல்லாபக்ஸ், எழுத்தாளர் அத்தேஷ், வழக்கறிஞர் பக்ரூதீன், சென்னை மேற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலி அஹமது உள்ளிட்ட ஏராளமானோர் வரவேற்றனர்.
Comments
Post a Comment