காரைக்குடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
காரைக்குடி: தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். இன்று காரைக்குடி வந்த அவர் நாளை ( சனிக்கிழமை ) காலை இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை, இளைஞர் அணி உறுப்பினர் சேர்ப்பு பணியை தொடங்கி வைக்கிறார். காரைக்குடி செல்லப்பா வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கிவைத்து பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்களை வழங்கிப் பேசுகிறார்.
அமைச்சராகி முதன் முதலாக வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் செய்துள்ளார்.





Comments
Post a Comment