அரிமா சங்க விருதுகள்!

சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத்தின் சேவையை பாராட்டியும், வட்டாரத் தலைவர் நண்பன் எம்.முகம்மது அபுபக்கருக்கு விருது வழங்கப்பட்டது. லயன்ஸ் சங்கம் 324 ஜெ யூனிட்டி ஆண்டின் முதல் காலாண்டில் சங்கங்கள் ஆற்றிய சீரிய பணிகளை பாராட்டி அங்கீகரிப்பதற்கான கேட் (GAT) காலாண்டு விருதுகள் வழங்கும் நிகழ்வு வானகரம் தனகோட்டி அம்மாள் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆளுநர் பி.வி. ரவீந்திரன் தலைமையில் கேட் தலைவர் பி.ஜெயக்கொடி ஏற்பாட்டிலும் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டு மாவட்டத் தலைவர் எஸ்.வி.மாணிக்கம், செயலாளர் ஆர்.ஸ்ரீதரன் சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத்திற்கு சிறந்த சங்கத்திற்கான (கோல்டு) விருதை வழங்க,
தலைவர் எம்.அன்சர் ஃபாத்திமாவும் சிறந்த வட்டாரத் தலைவருக்கான விருதை வட்டாரத் தலைவர் நண்பன் எம்.முகம்மது அபுபக்கர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதில் பன்னாட்டு முன்னாள் இயக்குநர் சம்பத், இளங்கோவன், முதல் நிலை ஆளுநர் பஜேந்திர பாபு, இரண்டாம் நிலை ஆளுநர் ஏ.டி. ரவிச்சந்திரன், முன்னாள் ஆளுநர்கள் டி.துளசிங்கம், சிவக்குமார், சுரேஷ், மாவட்டச் செயலாளர் இரா.ஏ.பாபு, பொருளாளர் சரவணன், மாவட்ட நிர்வாகிகள் மணிசேகர், ராமு, மோகன் குமார், கார்த்திக், மண்டலத் தலைவர் எஸ்.தங்கராஜ், வட்டாரத் தலைவர் சதீஷ்பாபு, கா.ஷண்முக சுந்தரம், மாவட்ட அமைச்சரவை நிர்வாகிகள், மண்டல, வட்டாரத் தலைவர்கள், சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

பாசிசத்தைப் புரிந்து கொள்வோம்!

ஊடகப் பார்வை: நான் பாடும் பாடல்!