அபூர்வ தகவல் : பெருக்கு மரம் (பாவோ பாப்)!

பெருக்கமரம், பாவோபாப் என்று சர்வதேச நாடுகளில் அழைக்கப்படுகிறது. இவ்வகை மரங்கள் மடகஸ்கார், ஆப்பிரிக்கா, அரேபியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் சொந்தமானவையாக காணப்பட்டாலும் இலங்கைக்கு இம்மரத்தை அறிமுகப்படுத்தியவர்கள் அரேபிய வணிகராகும். கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி.16ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட கால இலங்கையின் அயல்நாட்டு வாணிபத்தில் அரேபிய வணிகர் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளனர். அவர்கள் வணிகத்தின் பொருட்டு இலங்கையில் தங்கியிருந்த கடற்கரை நகரங்கள் துறைமுகங்களில் இம்மரத்தை நாட்டியுள்ளனர். இவ்வரலாற்றுப் பின்னணி கொண்ட இடங்களிலேயே பிற்காலத்தில் போத்துக்கேயர், ஒல்லாந்தர் தமது கோட்டைகளையும் அமைத்தனர். இதற்கு நெடுந்தீவு, மன்னார், காலி முதலான இடங்களில் உள்ள கோட்டைகளும் அவற்றின் அருகேயுள்ள பெருக்கு மரங்களும் சான்றாகும். கி.பி 1630 ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி போர்த்துக்கேயருக்கும் இரண்டாம் ராஜசிங்க மன்னனுக்கும் இடையில் மெனராகலை மாவட்டத்தில் உள்ள வெல்லவாய பகுதியில் யுத்தம் நடைபெற்றது. இதில் இலங்கை முஸ்லிம்களும் அரபிகளும் ஒட்டகத்தில் ஏறி போர்த்துக்கேயருக்கு எதிராக யுத்தம் செய்தார்கள். இந்தப் படை ஒட்டு பலகாய (ஒட்டக ராணுவம்) என்று அழைக்கப்பட்டது. இவர்கள் அரேபியாவில் இருந்து ஒட்டகங்களை மன்னார் துறைமுகத்திற்கு எடுத்துவந்ததாகவும் அப்போது பெருக்கமரம் எனப்படும் ஒட்டகங்கள் சாப்பிடும் பாவோபாப் ( Bao bab ) என்ற மரத்தை மன்னார் நகரில் நாட்டினார்கள் என்றும் வரலாற்று ஆசிரியர் ஹென்ரி கொரயா குறிப்பிடுகிறார். யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பழமையான பெருக்க மரம் ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இது அடன்சோனியா எனப்படும் பேரினத்தைச் சேர்ந்த மரமாகும். இது ஐந்து முதல் முப்பது மீட்டர் உயரத்திற்கு வளரக்கூடியவை. ஏழு முதல் பதினொரு மீட்டர் விட்டம் கொண்டவை. தமது உடற் பகுதியில் சுமார் 12,0000 லிட்டர் நீரை சேமித்து வைத்து கடுமையான வறட்சியைத் தாங்கும் தன்மை கொண்டது. இத்தகைய மரங்கள் தமிழ்நாட்டிலும் சில இடங்களில் உள்ளன.குறிப்பாக எனது சொந்த ஊரான இராமேஸ்வரத்திலும், தற்போது பல ஆண்டுகளாக வசிக்கும் சென்னையிலும் இத்தகைய மரங்களை பார்த்துள்ளேன். சென்னை அண்ணா சாலையில் இருந்து சென்டிரல் ரயில் நிலையம் செல்லும் பல்லவன் சாலை- பல்லவன் பஸ்டெப்போ (பாடிகாட் முனீஸ்வரன் கோவில்) அருகில் இன்றளவும் ஒரு மரம் நிலைத்து நிற்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த மரத்தின் அருகே மரத்தின் வரலாறு குறித்த தகவல்கள் அடங்கிய பலகை ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. அந்த நேரத்தில் அந்த தகவல்களை புகைப்படத்துடன் எனது முகநூலில் பதிவேற்றம் செய்து இருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடும் புயலின் காரணமாக பெயர் பலகை சேதமடைந்து பின்னர் காணாமல் போனது. ஆனாலும் மரம் இன்றளவும் நிலைத்து நின்று கொண்டிருக்கிறது. ** தகவல்: எம்.ஜி.ஆர்.டிவி ஹமீது பீப்பிள் மீடியா ரிசர்ச் டிரஸ்டு 9941086586 ** படம் - யாழ்ப்பாணம் புங்குடுதீவில் காணப்படும் பழமையான பெருக்க மரம்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!