இஸ்லாம் மார்க்கத்தை தழுவினால் இட ஒதுக்கீடு இல்லையா?
இஸ்லாத்தை விரும்பி வாழ்வியலாக ஏற்கும் சகோதரர்களை முஸ்லிம் சமூகத்தின் எந்த பிரிவில் சேர்ப்பது என்பது தொடர்பான தெளிவான வழிகாட்டுதல் தமிழக அரசால் வழங்கப்படவில்லை.
காரணம் அது தொடர்பான ** ( படம் : புகழப்பட்டவர் நூல் வெளியீடு! இனிய திசைகள் செய்தி )***
கோரிக்கை எதுவும் முஸ்லிம்களால் முன்வைக்கப்படவில்லை.
தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கான 4 கடிதங்களில் இஸ்லாத்திற்கு மதம் மாறுபவர்களை " Others Category " என்ற வகையில் சேர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் இஸ்லாத்தை ஏற்பவர்களுக்கும் அவர்களுடைய வாரிசுகளுக்கும் கல்வி - வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
இஸ்லாத்தை ஏற்ற இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த யு. அக்பர் அலி அவர்கள் BCM பட்டியலில் வரமாட்டார் என்று TNPSC செயலாளர் அளித்த உத்தரவு செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு தமிழக அரசின் இந்த தெளிவில்லாத கடிதங்களே காரணம்.
இஸ்லாத்தை விரும்பி ஏற்கும் யாரையும் BCM பட்டியலில் உள்ள லெப்பை, ராவுத்தர், மரைக்காயர், அன்சார், தக்னி, மாப்பிள்ளை, ஷேக், செய்யது ஆகிய 8 பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் சேர்த்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெளிவாக அரசாணை வெளியிட வேண்டும்.
இந்த கோரிக்கையை உடனடியாக தமிழக அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று அரசாணை பெற வேண்டிய பொறுப்பு இஸ்லாமிய அமைப்புகளின் வழக்கறிஞர்கள் அணிக்கு இருக்கிறது.
---------------------------------------------------------------
தமிழக அரசின் கடிதங்கள் :
(vide Lr No.11373/BC_MBCs/09-01 dated
04.02.2010, Lr No.11373/BC_MBCs/09-02 dated 22.08.2012, Lr No.6907/BC_MBCs/2015-01 dated 04.05.2017 and Lr No.587/BC_MBCs/2019 dated 17.05.2019).
** தகவல் :
முஹம்மது முஹ்யித்தீன் மதனீ,
சவூதிஅரபிய இஸ்லாமிய மேனாள் துபை பிரதிநிதி.

Comments
Post a Comment