கேரளாவில் நீதிபதியாகும் ஆலிம்!

மௌலவி சி.அப்துர் ராசிக் சுரைஜி.... எம். ஏ., எல். எல். பி., எல். எல். எம். படித்தவர். மார்க்க கல்வியுடன் உலகக்கல்வி இணைந்த பாடத்திட்டத்தின் அவசியத்தை உணர்ந்த கேரள முஸ்லிம்கள், பல்லாண்டுகளுக்கு முன் பெருமுயற்சி செய்தனர். தற்போது அது, பல்வேறு அரசு வேலை வாய்ப்புகளில் பயனளித்து வருகிறது! கண்ணூர் மாவட்டத்தில் கட்டாங்கோடு ஊரைச் சார்ந்த அப்துர் ராசிக், தொடக்க கல்வி முதல் பத்தாம் வகுப்பு வரை மலையாள மீடியத்தில் பயின்றார். இவரின் தந்தை முஹம்மது மரணிக்க, தாயார் ஆமினா இவரை மார்க்க கல்வி பயில அனுப்பி வைத்தார். குற்றியாடி சிராஜுல் ஹுதா அரபிக் கல்லூரியில் +2 உடன் 2005 முதல் 2012வரை மார்க்க கல்வி பயின்று சுரைஜி ஸனது பெற்றார். சிராஜுல் ஹுதா அரபிக் கல்லூரியில் ஏற்பட்ட கல்வித்தாகம், அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது. கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆங்கில இலக்கியம், சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து எம்.ஏ. ஆங்கில இலக்கியமும் தேறினார். காரந்தூர் மர்க்கஸ் சட்டக்கல்லூரியில் சேர்ந்து ஸகாஃபி ஸனதுடன் எல்.எல்.பி முடித்த அப்துர் ராசிக், மீண்டும் திருப்பதி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து எல்.எல்.எம் தேர்ச்சி பெற்றார். தற்போது வடகரா நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிவரும் நிலையில், சமீபத்தில் கேரள மாநில அரசு நடத்திய 'முன்ஷிஃப்' பதவிக்கான ஜுடிசியல் தேர்வு எழுதினார். இரண்டு தினங்களுக்கு முன் வெளியான தேர்வு முடிவுகளில் மவ்லவி அப்துர் ராசிக், 28வது ரேங்கில் தேர்ச்சி பெற்று நீதிபதி இருக்கையில் அமரப்போகும் முதல் ஆலிம் எனும் சிறப்பு பெறுகிறார். மவ்லவி அப்துர் ராசிக் ஆலிம் விசாரணை நடத்தி வழங்கப்போகும் தீர்ப்புகள், இந்திய நீதித்துறை வரலாற்றில் இறையருளால் புதிய சரித்திரம் படைக்கட்டும் ! தகவல் : முஹம்மது முஹ்யித்தீன் மதனீ

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!