செஸ் கிரேண்ட் மாஸ்டர் : 16 வயதில் சாதனை!

காரைக்குடி: தனது 16 வயதில் செஸ் கிரேண்ட் மாஸ்டர் ஆகி சாதனை படைத்துள்ளார் பிரானேஷ் என்ற மாணவர்! * சர்வதேச செஸ் சம்மேளனம் சார்பில் ரில்டன் கோப்பைக்கான பன்னாட்டு சதுரங்க போட்டி சுவீடன் தலைநகரம் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது. இதில் 29 நாடுகளைச் சேர்ந்த 136 வீரர்கள் பங்கேற்ற நிலையில் இந்தியா சார்பில் தமிழக வீரர் பிரானேஷ் பங்கேற்று 8 புள்ளிகள் குவித்து சாம்பியன் பட்டத்தை வென்றார். 5 வயது முதல் செஸ் விளையாடி, இப்போது இந்தியாவின் 79வது கிரேண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார். காரைக்குடி அருகே புதுவயல் வித்யாகிரி பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு காரைக்குடியில் பள்ளியின் சார்பிலும் பொது மக்கள் சார்பிலும் பாராட்டு குவிந்து வருகிறது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பாராட்டி கவுரவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!