நாகூர் தர்காவில் அரசு பொது கணக்கு குழு!

நாகூர்: தமிழக அரசு பொது கணக்கு குழு தலைவர் கு. செல்வ பெருந்தகை, உறுப்பினர்கள் ஜவாஹிருல்லா , பூண்டி கலைவாணர் மற்றும் அரசு செயலர்கள் நாகூர் தர்கா வருகை புரிந்தனர். அவர்களுடன் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷா நவாஸ் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியர் தம்பு ராஜ் வருகை புரிந்தார்கள். நாகூர் தர்கா அட்வைசரி பிரசிடன்ட் கலீபா சாஹிப் அனைவரையும் வரவேற்று சால்வை அணிவித்தார். பின்னர் நாகூர் ஆண்டகை தர்காவினுள் சென்று பாத்திஹா ஒதி் துஆ செய்யப்பட்டது. தர்கா நிர்வாகம் சார்பாக கட்டிடங்களை புதுப்பிக்க அரசு உதவி கோரப்பட்டது. வருகை புரிந்த அனைவருக்கும் அரிய நாகூர் தர்கா புகைப்படம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டிகள், தர்கா மானேஜர், நாகூர் ஜமாஅத் நிர்வாகிகள் உடனிருந்தனர். ( தகவல் மற்றும் புகைப்படம் : நாகூர் தர்கா அலுவலக செய்தி
மற்றும் ஊடகப்பிரிவு.)

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!