விவேகானந்தர் பார்வையில் இஸ்லாம்!

சுவாமி விவேகானந்தர் ஒரு உண்மையான ஆன்மீகவாதி. உலகின் அனைத்து மதங்களின் உன்னதங்களையும், போற்றிப் பாராட்டியவர்! ஆனால் இன்று மதவெறியைக் கிளறி நாட்டை சுடுகாடாக்க முயலும் இயக்கத்தினர் தனது பிரச்சாரத்திற்கு விவேகானந்தரை பயன்படுத்திக் கொள்கின்றனர். இது விவேகானந்தரை இழிவுபடுத்துவது ஆகும். * இஸ்லாம் மதம் குறித்தும், முகலாய மன்னர்களின் ஆட்சி குறித்தும் அவர்கள் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். ஆனால் ஆன்மீகவாதியான விவேகானந்தர், " இஸ்லாம் மதம் குறித்து மிக உயரிய எண்ணம் கொண்டு இருந்தார். இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களை பலவந்தமாக மதம் மாற்றினர் என்ற பொய்யைத் தொடர்ந்து சொல்லி வருகின்றார்கள். ஆனால் விவேகானந்தர் * பாமர மக்களுக்கு இஸ்லாம் ஒரு செய்தியாக வந்தது என்றார். *முதல் செய்தி சமத்தவம். ஒரே மதம் தான் உள்ளது. அதில் * அன்பு, வம்சம், நிறம் அல்லது வேறு எதுபற்றியும் எந்தக் கேள்வியும் கிடையாது * என்று கூறினார் . இதுவல்லவா தெளிவான சிந்தனை! தீர்க்கமான அறிவு..! சுவாமி விவேகானந்தர் மேலும் பேசுகிறார்: * ”இந்தியாவை முகமதியர்கள் வென்றது ஏழை எளியவர்களுக்கு ஒரு விடுதலை வாய்ப்பாக அமைந்தது.* எனவே தான் நமது மக்களின் ஐந்தில் ஒரு பகுதியினர் முஸ்லிம்களானார்கள். இன்றுள்ள சூழ்நிலைக்கு விவேகானந்தர் அன்றைக்கே அளித்துள்ள தெளிவான விடை இது. அமெரிக்காவில் நடந்த உலக சமய மாநாட்டில் * " சகோதரர், சகோதரிகளே..!” * என்று அவர் அழைத்தது வெறும் உதட்டு வார்த்தை அல்ல. உள்ளத்தில் இருந்து வந்த உண்மை வார்த்தை ஆகும். ** உலக மக்கள் யாவரும் சகோதரர்களே! ** என்பது திருமறை குர்ஆன் முழக்கமாகும். அதன் தாக்கமே விவேகானந்தரின் வாக்காகும்! சிலர் இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு என்று கூறுகின்றனர். * முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகிய மூவரும் தான் எங்கள் பிரதான எதிரிகள்* என்று கூறும் அவர்கள் விவேகானந்தர் பெயரை உச்சரிக்கக் கூட தகுதியற்றவர்கள் என்பதை இதன் மூலம் உணரலாம். ஆனால் விவேகானந்தரின் ஆன்ம உள்ளம் கண்ட கனவு வேறு. * ”என்னுடைய மனக்கண்ணில், எதிர்காலம் குற்றம் - குறையற்ற முழுமையானதாக இருக்கும். கஷ்டங்கள் மற்றும் குழப்பங்களிலிருந்து மீண்டு விடுபட்ட *வேதாந்த மூளையும் * இஸ்லாமிய உடலும் கொண்ட ஒளிமயமான இந்தியாவாகத் திகழும்!” * இந்தியா என்ற மதச்சார்பற்ற நாடு அனைத்து மதங்களையும் பண்பாட்டையும், இனங்களையும், மொழிகளையும் கொண்ட பல வண்ண மலர்த்தோட்டமாக இருக்க வேண்டும் என்பதே விவேகானந்தரின் கனா..! *விவேகானந்தரைப் பொறுத்தவரை இஸ்லாம் என்ற மார்க்கம் சமத்துவம் மற்றும் அன்பு மயமானது!* *அது ஆக்கிரமிப்பு மதம் அல்ல. ஆகவே நாம் விவேகானந்தரை நேசிப்போமானால், நம் இந்திய நாட்டு மக்களை நேசிப்போமாக!* வாழ்க வளர்க இந்து முஸ்லிம் ஒற்றுமை! வாழ்க வளர்க அனைத்து இந்தியர்களின் ஒற்றுமை!
** ( தொகுப்பு: ஹமீது )

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!