ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு மாநாடு!
சென்னை: மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. அதன் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ, எஸ்டிபிஐ மாநில செயலாளர் கரீம், மமக துணை பொதுச் செயலாளர் யாக்கூப், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர்கள் சையது அலி, ஜாகிர் உசேன் என பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் துணை தலைவர் முஹம்மது முனீர் பேசியபோது,
பாரம்பரியம், பண்பாட்டு வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை உரிய உயிர் பாதுகாப்புடன் பாதுகாக்க வேண்டும்.
இன்று ஜல்லிக்கட்டில் சுப்ரீம் கோர்ட்டில் தடை கோருவார்கள், நாளை ஆன்மீக நம்பிக்கையான குர்பானி மற்றும் பல்வேறு மத நம்பிக்கை, பலியிடுதல் ஆகியவற்றில் தடை கோருவார்கள். ஏற்கனவே தமிழ் நாட்டில் ஒட்டக குர்பானிக்கு தடை பெற்று விட்டார்கள்.
நாம் ஒற்றுமையுடன் களம் காண வேண்டும். ரம்மி, நீட் போன்ற சட்டமன்ற தீர்மானங்களில் கையெழுத்துப் போடாத தமிழ்நாடு கவர்னர் ரவியின் செயல் கண்டிக்கத்தக்கது.
தமிழகம் என்பதை விட தமிழ்நாடு என்பதை நாம் உரக்க முழங்குவோம்.
ஷரியத் சட்டத்தில் கை வைக்கும் பாசிச பிஜேபி ஒன்றிய அரசின் பொது சிவில் சட்டத்தை முறியடிப்போம் என குறிப்பிட்டார்.


Comments
Post a Comment