கவிதை: சாதி மத பேதம் இல்லா பொங்கல் திருநாள்!

பொங்கல் திருநாள் - இன்று பொங்கல் திருநாள்! புத்தாண்டு இன்று தொடங்குதம்மா... எங்கள் திருநாள்- இது எங்கள் திருநாள்! ஏற்றத்தாழ்வுகள் இல்லையம்மா... சாதி இல்லையே எந்தச் சார்பும் இல்லையே! வாதம் இல்லையே மதபேதம் இல்லையே...! வம்பும் இல்லையே சிறு சண்டை இல்லையே! அல்லல் இல்லையே ஒரு தொல்லை இல்லையே...! துன்பமில்லையே இன்பம் கொள்ளை கொள்ளையே...! ஆசை இல்லையே கையில் காசும் இல்லையே! வேட்டும் இல்லையே தொட்டால் தீட்டும் இல்லையே! கூட்டம் இல்லையே பெரும் கூச்சல் இல்லையே! செங்கரும்பையே இளைஞர் தின்பதில்லையே! டாஸ்மாக்கிலே கூட்டம் தாங்கவில்லையே...! பொங்கல் திருநாள் - இன்று பொங்கல் திருநாள்! ** - கவிஞர் இக்பால் ஹசன் **

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!