புதிய முயற்சி : சிறையில் நூலகங்கள் அமைக்கும் பணி!

சென்னை: சிறைத் துறை டி ஐ ஜி முருகேசன் (அட்மின்) முயற்சி காரணமாக தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளில் புதிதாக நூலகங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதற்கு வழங்க சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வருகை தரும்பொது மக்களிடம் இருந்து புத்தகங்கள் இலவசமாக பெறப்படுகிறது. அதன் அறிவிப்பும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சிறைத் துறை நூலகத்திற்கு இலவசமாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வெளியீடான திருகுர்ஆன் தமிழாக்கத்தை டிஐஜி முருகேசன் (அட்மின்) அவர்களிடம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணை தலைவர் முஹம்மது முனீர், பொருளாளர் பிர்தெளஸ், மாநில செயலாளர் தக்வா மொய்தீன் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்த முயற்சி சிறையில் இருப்பவர்களை பண்படுத்த உதவும் என்றும் பாராட்டு தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!