தமிழ்நாடு என்பதே நமக்குப் பெருமை!
இந்திய ஒன்றியத்தின் பெரும்பாலான மாநிலங்களின் பெயர்கள் அந்தந்த இன மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் அம்மக்களின் நிலம், தேசம், நாடு என்ற வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு மட்டும் தான் ஏதோ தனிநாடு என்ற வகையில் பெயரிடப்பட்டுள்ளதாக பாசிசவாதிகள் கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற நினைத்தால் (அது முடியாது என்பது வேறு தகவல்) முதலில் மிகப்பெரிய நாடு என தன் மாநிலத்திற்கு பெயர் வைத்துள்ள 'மகாராஷ்டிரா' வின் பெயரை மாற்ற வேண்டும். முதலில் அம் மாநிலத்தை பிரிக்க ஒன்றிய அரசுக்கு தைரியம் உள்ளதா?
அத்துடன்,
- ராஷ்டிரா என்றால் தேசம் - நாடு (Nation & Dominion) என்று பொருள். மகாராஷ்டிரா மாநிலத்தின் பெயரை மாற்றலாமா?
- பிரதேசம் என்றால் நிலம் , துணைப் பகுதி அல்லது துணை நாடு என்று பொருள். இதன் அடிப்படையில் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பெயர்களை மாற்றலாமா?
- 'கண்ட் ' என்றால் நிலம் என்று பொருள். இதன் அடிப்படையில் ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் பெயர்களை மாற்றலாமா?
- ' லேண்ட் ' என்றால் நிலம் என்று பொருள். நாகாலாந்து மாநிலத்தின் பெயரை மாற்றலாமா?
- ' பூர் ' என்றால் நிலம் என்று பொருள். இதன் அடிப்படையில் மணிப்பூர் மாநிலத்தின் பெயரை மாற்றலாமா?
- ' ரம் ' என்றால் நிலம் என்று பொருள். எனவே மிஜோரம் மாநிலத்தின் பெயரை மாற்றலாமா?
- ' ஸ்தான் ' என்றால் நிலம் என்று பொருள். எனவே ராஜஸ்தான் மாநிலத்தின் பெயரை மாற்றலாமா?
ஆனால், தமிழ்நாடு என்றால் மட்டும் இந்தி வெறியர்களுக்கும், அவர்களுக்கு ' ஜால்ரா ' போட்டு - தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த, உண்ட வீட்டுக்கு துரோகம் செய்வோருக்கு இளக்காரமாகப் போய் விட்டாதா?! தமிழ்நாட்டின் கடைசி குடிமகன் உள்ளவரை அவர்களின் தீய எண்ணங்களும், துரோக சிந்தனைகளும் ஒருபோதும் நிறைவேறாது.
வேண்டுமானால், தமிழ்நாட்டின் மாநில எல்லைகளை பிரிக்கும் போது அன்றைய இந்திய ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் பல பகுதிகளை அண்டை மாநிலங்களுக்கு தாரை வார்த்து கொடுத்ததை மீட்டெடுத்து தமிழ்நாட்டின் நிலத்துடன் இணைக்க முயற்சி செய்யலாம்.
அகண்ட பாரதம் என்பது பகல் கனவு. ஆனால், தரமான தமிழ்நாடு என்பது எதிர்வரும் தலைமுறையின் நினைவு.
தமிழ்நாடு என்பதே நமக்கு பெருமை!
** கட்டுரை ஆக்கம் :
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

Comments
Post a Comment