காஷ்மிரில் ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு!
ஸ்ரீநகர்: தேசிய ஒற்றுமைப் பயணம் மேற்கொள்ளும் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்களில் 12 மாநிலங்களைக் கடந்து 3,570 கி.மீ. பயணம் செய்து இந்திய மக்கள் மனதில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு செப். 7ம் தேதி கன்னியாகுமரியில் இந்த ஒற்றுமை பயணத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பல்வேறு மாநில பயணங்களில் ராகுல் காந்தி ஒன்றிய பிஜேபி - மோடி அரசின் மதவாத - பிற்போக்கு ஆட்சியைத் தோலுரித்துக் காட்டினார். அவருக்கு காஷ்மிரில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மகபூபா முப்தி, அவரது மகள் இல்திஜா முப்தி உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர். அவரது தங்கையும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார்.
ஜன.29 அன்று இந்த லட்சியப் பயணம் நிறைவடைந்து, 30ம் தேதி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றி, எஸ்.கே. விளையாட்டு அரங்கில் நிறைவு விழா நடைபெற்றது. இதில் 23 எதிர்க் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
( செய்தி புதுப்பிக்கப்பட்ட நாள்:
30-01-2023)

Comments
Post a Comment