நூல் அறிமுகம் : புர்தாஹ் ஷரீஃப்!
புர்தாஹ் ஷரீப்
மூலம் : இமாம் பூஸிரி (ரஹ்)
தமிழ் கவியாக்கம் - பொருளுரை: -
செய்யிதுராவுத்தர் மௌலவி
S.K.M. ஜெகபர்தீன் உலவிய்யு கூத்தாநல்லூர்.
(பேராசிரியர் மன்ப உல் உலா அரபிக் கல்லூரி கூத்தாநல்லூர்.)
***********************
( நூலில் இருந்து ஒரு பகுதி இங்கே வெளியிடப்படுகிறது : )
அத்தியாயம் 6 கவிதை 88
தலைப்பு : திருக் குர்ஆன் சிறப்புகள்

*************************
புர்தா கவிதை : 88.
دعنى ووصفي ايات له ظهرت
ظهور نار القرى ليلا على علم .
தமிழில் :
விருந்துக்கு மலையில்லிரவு
எரியும் தீ வெளியாவதாய்
வெளியான அவரற்புதங்
களை சொல்ல என்னை விடு.
**********************
பொருள் :
(அரபியர் பொது விருந்துக்கு மக்களை அழைப்பதற்காக அருகிலுள்ள மலை மீது ஏறி தீ மூட்டுவர். ஜுவாலை விட்டு எரியும் அத்தீயைக் கண்ட மக்கள் மறுநாள் அம்மலையடிவாரத்தின் அருகில் நடைபெரும் விருந்தில் கலந்து கொள்வர். இவ்வாறு) விருந்துக்கு (அழைப்பு விடுப்பதற்காக)
இரவு நேரத்தில் மலை மீது மூட்டப்படும் தீ (பளிச் என்று ) தெரிவது போல் (தெள்ளத் தெளிவாக தெற்றென நபியவர்களின் முஃஜிஸாக்கள் அனைத்தும் நம் அனைவராலும் அறியப்பட்டுள்ளது. அவ்வாறு) வெளியான (குர்ஆன் உள்ளிட்ட) அவரது அற்புதங்கள் அனைத்தையும் ( நான் விரிவாக) சொல்லிப் புகழ (விரும்புகிறேன். இவ்விஷயத்தில் ) என்னை (தடுக்காமல்) விட்டு விடுங்கள்.
********************
கவிஞரின் தேட்டமும் ஏக்கமும் :
தன் அன்றாட வாழ்வையே
அனைவரும் கண்டு வியக்கும்
அற்புதமாய் வாழ்ந்து காட்டிய -
எண்ணி முடிக்க இயலாத எண்ணற்ற அதிசயங்களையும் அற்புதங்களையும் தன்னகத்தே கொண்டு தனித்துவமான வாழ்வை வாழ்ந்து காட்டிய, நபியவர்களின் பெருமைக்கு இணையுண்டோ! யா அல்லாஹ் !
அறிவு வியந்து நோக்கும் குர்ஆன் உள்ளிட்ட எண்ணற்ற அற்புதங்களை நபித்துவத்தின் சங்கை மிகு ஆதாரங்களாக வழங்கப்பட்ட அருமை நபி நாயகத்தின் ஆழிய புகழ் பாடி அவர்களின் பேரன்பை நான் பெற்றிட வேண்டுமே...!
யா அல்லாஹ்!அருள் புரிவாயாக !
*******************
அரபிச் சொற்பொருள் : -
دعنى : (என்னை ) தடுக்காமல் விடுங்கள்
ووصفي : நான் வர்ணித்து சொல்வதையும்
(தடுக்காமல்
விடுங்கள்)
ايات له நபியவர்களது முஃஜிஜாக்களை
ظهرت : வெளிப்படையாக உள்ளதே அத்தகைய
ظهور : வெளிப்படையாக இருப்பது போல்
نار القرى :விருந்துக்கான நெருப்பு (எரிவது)
ليلا : இரவில்
على علم : மலையின் உச்சியில் மேல்

Comments
Post a Comment