நூல் அறிமுகம் : பஞ்சம், படுகொலை, பேரழிவு -கம்யூனிஸம்!

*பஞ்சம் படுகொலை பேரழிவு - கம்யூனிஸம் * - அரவிந்த் நீலகண்டன்
***** கம்யூனிஸம் உலகுக்கு வழங்கிய கொடைகளை பல்வேறு ஆய்வாளர்கள் எண்ணி வகைப்படுத்துவார்கள். ஆனால் கம்யூனிஸத்தால் பஞ்சம், படுகொலை, பேரழிவுகள் நிகழ்ந்தனவா? என ஆராய்ந்ததில் விளைவே இப்புத்தகம். கம்யூனிஸத்தின் பெயரால் உலகெங்கும் பல அப்பாவி மக்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். லெனின், ஸ்டாலின், மாவோ என்று கம்யூனிஸத் தலைவர்களுக்குள்ளும் ரத்தம் தோய்ந்த வரலாறுகள் உண்டா? சக தோழர்களையே அவர்கள் வேட்டையாடினார்களா? புக்காரினும் -டிராட்ஸ்கியும் என்ன ஆனார்கள்? ஸ்டாலின், லெனினை எப்படி எதிர்கொண்டார்? வதை முகாம்கள் ஹிட்லர் காலத்துக்கு முன்பே ரஷ்யாவில் உண்டா? கம்யூனிஸம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? நேரு கம்யூனிஸத்தின் மீது நம்பிக்கை கொண்டவரா ? தாஷ்கண்ட்டில் லால் பகதூர் சாஸ்திரிக்கு என்ன ஆனது? என்பது போன்ற பல்வேறு கேள்விகளை மையப்படுத்தி இப்புத்தகம் எழுதப்பட்டதுள்ளது. எனக்கு பிடித்த கம்யூனிஸத்தை கொஞ்சம் வெளியே இருந்தும் பார்க்கலாமே/அறியலாமே என தேடியதால் இப்புத்தகம் நம் முன்! அதனால் அதற்காக இப்புத்தகமே என்னுடைய கருத்தாக ஆகிவிடாது! ************** விலை : ரூ. 300 * யூனிக் புக்ஸ் * தொடர்புக்கு: ஹாஜா நவாஸ் 9176277692 ( Haja Nawaz )

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!