நூல் அறிமுகம்: மகாத்மா காந்தி படுகொலை - புதிய உண்மைகள்!

பாசிசத்தை அறியும் புத்தகங்களின் வரிசையில்..... *மகாத்மா காந்தி கொலை வழக்கு புதிய உண்மைகள் - அப்பு எஸ்தோஸ் சுரேஷ், பிரியங்கா கோட்டம்ராஜூ* தன் வாழ்நாள் முழுதும் ஹேராம் என்று கூறியவர், சனதனத்தினை வலுவாக பிடித்துக்கொண்டிருந்தவர் , இறக்கும் வரையிலும் பிராத்தனைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர். அப்படி இருந்தும் ஏன் காந்தியடிகள் கொல்லப்பட்டார்? அதுவும் கோட்சே எனும் பார்ப்பணரால்! காந்தி இந்துவாக இருந்தார்... கோட்சே இந்துத்துவா ஆக இருந்தார் என கூறி கடந்துப்போனாலும், இன்று கோட்சேவை கதாநாயகனாக ஆக்கிடும் நிலை ஆட்சியாளர்களால் வெளிப்படையாகவே செய்யப்படுகின்றது. இதற்கு என்ன காரணங்கள் முதன்மையாக இருக்கும் என ஆராய்ந்தால் அதற்கு கிடைத்திடும் பதிலே இந்நூல். காந்தியின் மீது ஒரு சாரார் கொண்டிருந்த வெறுப்புணர்ச்சியின் அடிப்படை என்ன? அந்த வெறுப்பு உணர்ச்சி கோபமாகவும், பின் வெறியாகவும் மாறிய தருணம் எது? கோட்சே எப்படி உருவாக்கப்பட்டான்? சதித்திட்டங்கள்? படுகொலைக்கான திட்டமிடல்கள்? இறுதியாக படுகொலை என பதைபதைக்க வைக்கும் பல நிகழ்வுகள் அடுத்தடுத்து மறைக்கப்பட்ட பல தகவல்களை கொண்டு உங்கள் மனக்கண்ணை விரிவடையச் செய்யும் நூல்! வெறும் கோட்சேயுடன் இவ்வழக்கை பார்த்திட கூடாது. தேசத்தின் தந்தையையே திட்டமிட்டு சுட்டுக்கொன்று அரசியலையே தங்கள் கைகளில் வைத்திருக்கும் மாபாதகர்களின் சூழ்ச்சியாக பார்த்திட வேண்டும். இந்நூலானது மறைக்கப்பட்ட வெவ்வேறு ஆவணங்களின் அடிப்படையில் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யார் யார்? அவர்களை ஆசிர்வதித்து பின்னாளில் இருந்து இயக்கியது யார் யார்? எப்படிப்பட்டச் சிக்கல்களை இவ்வழக்கில் இணைத்தார்கள்? குற்றவாளகள் எப்படி இதனை எதிர்கொண்டார்கள்? வழக்கானது எப்படித் தீர்ப்பளிக்கப்பட்டது? போன்றவற்றைப் புத்தகத்தின் முக்கிய பகுதியாக விவரிக்கிறது.... "தேசத்தந்தையின் கொலையாளிகளையும் - இன்றும் ஏன் அவர்களை அறியவேண்டியதுள்ளது என்பதையும் - மக்களுக்கான அச்சுறுத்தல்கள் என்னென்ன என்பதையும் அறிய... *விலை : 350* Unique Books *தொடர்புவையுங்கள்* : Call / WhatsApp *9176277692* Haja Nawaz

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!