எழுத்தாளரின் அற உணர்வு!

தி இண்டியன் எக்ஸ்பிரஸ் குரூப் ' தேவி அவார்டு' என்ற பெயரில் தேசம் முழுமைக்கும் 12 ஆளுமைகளை தேர்ந்து எடுத்திருந்தது! அதில் ஒருவர் கவிதை இலக்கியத்தில் தனித்துவம் படைத்த சுகிர்தராணி!* இவர் தலித் மக்களின் பாடுகளையும், பெண்களின் உளவியலையும் கருப் பொருளாக்கி இலக்கியத்தை படைப்பவர். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஐ.டி.சி சோழா என்ற ஸ்டார் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு சென்ற போது தான் இந்த விருது நிகழ்வு அதானி குருப் ஸ்பான்ஸர் செய்துள்ளது தெரிய வந்தது. " இந்தியாவையே சூறையாடிக் கொழுக்கும் அதானி குருப் ஸ்பான்சரில் வழங்கும் விருதை ஏற்க என் மனம் ஒப்பவில்லை’’ என சுகிர்தராணி அந்த விருதை தவிர்த்த செய்தியை தி வயர் இணைய இதழில் வாசித்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. இந்த தன்மான உணர்வும், அறச் சீற்றமும் எல்லா விருதுகளையும் விட உசத்தியானது!* ஊரைக் கொள்ளையடித்து உலையில் போட்டுக் கொண்டிருக்கும் அதானியிடம் எந்தக் குற்றவுணர்வுமின்றி, யாசகம் பெற்று சுகபோகங்களில் திளைக்கும் ஊடகங்கள் - அவர் செய்யும் ஊழல்களை எப்படி அறச் சீற்றத்துடன் தட்டிக் கேட்க முடியும்? நம் போன்ற பத்திரிகையாளர்கள், படைப்பாளிகள், சோற்றில் உப்பு போட்டு சாப்பிடும் உணர்வாளர்கள் தான் இந்த சமூகத்திற்கு முன் மாதிரியாக இருக்க முடியும்! ** - மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன்

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!