பண்பால் உயர்ந்த உள்ளமே!
( மறைந்த தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் உபயதுல்லா பற்றி இரங்கல் கவிதை! )
* அன்பால், பாசத்தால்,
அரவணைப்பால், அனைவரையும்
நேசிக்கும் , பண்பால்
உயர்ந்த உள்ளமே !
* உறவையும், நட்பையும்
ஒருசேர உறவாடும்
உன்னத மனிதனே !
மதமாச்சரியம் இல்லாத
மதங்களுக்கு அப்பாற்பட்ட
மனித நேய அடையாளமே !
* வியாழன் தோரும்
வறியவருக்கு வாரி
வழங்கிய வள்ளலே !
இல்லை என்று வருவோர்க்கு
இல்லையெனாது வழங்கிய
தமிழ்வேல் வள்ளலே !
* திருக்குறள் , தேவாரம்,
திருப்புகழ் , கம்பராமாயணம்,
தொல்காப்பியம், நன்னூல்,
சிலப்பதிகாரம் என்றே
நூல்கள் பல பயின்று
தமிழருவியாய் உரையாற்றும்
தமிழறிவு களஞ்சியமே !
* திருமண நிகழ்வில்
கலந்து மகிழ்ந்த வேளையிலே
காலன் வந்து விட்டானோ ?
அறம் பாடி விரட்டாமல் - கண்
அயர்ந்து விட்டாயோ ?
* காலன் பணிமுடித்தானோ ?
கண்ணீரில் மிதக்க விட்டாயே !
* அல்லாஹ்வின் திருவடியில்
இளைப்பாறச் சென்றாயோ ?
உன்னை இழந்து வருந்தும்
உறவுக்கு, நட்புக்கும்
ஆறுதல் சொல்வது
யார்? யார்? யார்?
******
- தஞ்சை ந.இராமதாசு

Comments
Post a Comment