பலஸ்தீனத்தில் இஸ்ரேல் அட்டூழியம்!
டெல்அவிவ்: பலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருகிறது. சமீபத்தில் பலஸ்தீன் நப்ளஸ் நகருக்குள் திடீரென நுழைந்த இஸ்ரேல் ராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு குண்டு வெடிப்பு சத்தமும் துப்பாக்கி வெடிக்கும் சத்தமும் கேட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த தாக்குதலில் 11 பலஸ்தீனர்கள் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர்.
இது இனப்படுகொலை என்று பலஸ்தீன் மூத்த அதிகாரி உசேன் அல் ஷேக் கண்டனம் தெரிவித்தார். இதற்கு இஸ்ரேல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இது பிராந்தியத்தில் பதற்றம் ஏற்படுத்தியுள்ளது என்று பலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்தார். இதற்கு பதிலடியாக காசா முனையில் இருந்து 6 ராக்கெட்களை பலஸ்தீன் போராளிகள் வீசினர்.

Comments
Post a Comment