தலைவர் முனீருல் மில்லத் நேரில் காயல் மகபூப் நலம் விசாரித்தார்!

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இன்று 28.2.23 அன்று பிறை மேடை அலுவலகம் வருகை தந்தார். உடல் நலம் குன்றி மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் அவர்களை நேரில் நலம் விசாரித்து சிகிச்சைகளை கேட்டு அறிந்து பூரண நலத்திற்கு துஆ செய்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா அகில இந்திய மாநாடு விளக்க கூட்டங்களுக்காக மாவட்டங்களில் பயணம் மேற்கொள்ளும் போதும் கூட்டங்களில் உரையாற்றும் போதும் உடல் நலத்தில் கவனம் செலுத்தும் படி தலைவர் வலியுறுத்தினார். ஒரு தொண்டனின் நலத்தில் தலைவர் அவர்கள் காட்டிய அக்கறை அங்கிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் பெத்தப்பா M.A.C. சுல்தான், வடசென்னை மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் முகம்மது ரபி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். ** தகவல்: - கோம்பை நிஜாமுதீன் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்ப அணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!