முன்னாள் ஐ. ஏ. எஸ். அதிகாரி ஹர்ஷ் மந்தர் கலந்துரையாடல்!
சென்னை:
உலக புகழ் பெற்ற சமூக ஆர்வலரும் , காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் ஆலோசகரும் குஜராத்தில் நடைபெற்ற முஸ்லிம் இன படுகொலைகளை கண்டித்து தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களுக்காக தனது எழுத்தால் பேச்சால் குரல் கொடுத்துவரும் மக்கள் போராளி ஹர்ஷ் மந்தர் அண்மையில் சென்னை வந்தார். அவருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எம் எல் ஏ தலைமையில் தமுமுக மாநில தலைமையகத்தில் நடைபெற்றது.
இதில் ஐ எப் டி - எஸ். என். சிக்கந்தர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணை தலைவர் முஹம்மது முனீர், பொருளாளர் பிர்தௌஸ் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அனைவரின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

Comments
Post a Comment