பிஜேபியை வீழ்த்த இந்திய அளவில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைவோம்! - மு. க. ஸ்டாலின்

சென்னை: முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக் கூட்டம் இன்று ( 1 - 3 - 2023 ) சென்னையில் நடைபெற்றது. இதில் நாட்டின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். அதில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசுகையில், நாட்டின் பன்முகத்தன்மையையும் மக்களின் ஒற்றுமையையும் காக்க பா.ஜ.க. வை வீழ்த்த தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி போல் இந்திய அளவில் அனைவரும் ஒன்றினைவோம். இப்போதே நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்காக உழைக்கத் தொடங்குங்கள். நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்று சூளுரைத்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாஹ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன், மாநில முதன்மை துணைத் தலைவரும் தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவருமான அல்ஹாஜ் அப்துல் ரஹ்மான், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர். ***************** செய்தி: தளபதி அஹமது

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!