கத்தரில் வேலை வாய்ப்பு!

தோஹா: கத்தரில் உள்ள இந்திய தூதரகத்தில் மூத்த மொழிபெயர்ப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பான அறிவிப்பை தூதரகம் அதிகாரப்பூர்வ பக்கத்தில் 14/03/23 அன்று வெளியிட்டுள்ளது. மேலும் நிரந்தர வேலை இது என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அனைத்து சலுகைகளையும் சேர்த்து மாதம் 10,000 ரியால் சம்பளம் வழங்கப்படும். அடிப்படை தகுதி: அரபு பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம். மேலும் அரபு மற்றும் ஆங்கிலம் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அரபியை ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து அரபியிலும் மொழிபெயர்க்கும் திறனும் விரும்பத்தக்கது. கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவதில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 28 பிப்ரவரி 2023 இன் அடிப்படையில் வயது கணக்கிடப்படும். மார்ச் 2023 இல் செல்லுபடியாகும் கத்தர் விசா கைவசம் உள்ள ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். * விண்ணப்பத்தை பிப்ரவரி 24க்கு முன் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். மின்னஞ்சல் முகவரி: cr1.doha@mea.gov.in * ஆதாரம் : arabtamildaily, arabtamildailyjobs

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!