பரங்கிப்பேட்டை அரசு டவுன் காஜிக்கு பாராட்டு நிகழ்ச்சி!

பரங்கிப்பேட்டை அரசு டவுன் காஜியாக கடலூர் மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்டுள்ள பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் மேனாள் செயலாளர் மவ்லவி ஹாஃபிழ் ஏ. லியாகத் அலி மன்பயீ அவர்களுக்கு பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் 16.03.2023 அன்று காலை குத்பு முஹ்யத்தீன் (புதுப்பள்ளி) ஜும்ஆ பள்ளிவாசலில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை கவுரவ தலைவர் எம்.எஸ். காஜா மொய்னுதீன் மிஸ்பாஹி தலைமையில், சிதம்பரம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவீ அல்ஹாஜ் எம். அப்துல் காதர் மரைக்காயர் உமரீ முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டையின் பெரும்பாலான உலமாக்கள் பங்கேற்றனர். அரசு டவுன் காஜி லியாகத் அலி மன்பயீ ஹஜ்ரத்துக்கு சால்வை அணிவித்து அவரின் சேவைகள் சிறப்பாக தொடர அனைவரும் வாழ்த்தி துஆ செய்தனர். அத்துடன் 50 ஆண்டுகளாக மார்க்கச் சேவையாற்றி, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் விருது பெற்ற அப்துல் காதர் மரைக்காயர் உமரீ ஹஜ்ரத்துக்கும் சால்வை அணிவிக்கப்பட்டு வாழ்த்துரை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!