வக்பு வாரிய தலைவர் பற்றி அவதூறு பரப்பியவர் மீது சட்ட நடவடிக்கை!
சென்னை: சமுதாயச் சேவை ஆற்றி வரும் வக்பு வாரிய தலைவர் - முன்னாள் எம்பி அல்ஹாஜ் அப்துல் ரஹ்மான் பற்றி அவதூறு செய்தி பரப்பியவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"வக்பு சேர்மனை உடனடியாக நீக்க கோரி" என்ற தலைப்பில்
பி. நவ்ஷாத் அலி, திமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர், பொள்ளாச்சி .
என்ற பெயரில் வலைதளங்களில் வேகமாக ஒரு செய்தி பரவியது.
இதனை மறுத்து கோவை தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு அமைப்பாளர்
சஹர் பானு பைஜில் எழுத்து மூலமும், பேட்டி மூலமும் விளக்கமளித்து அந்த போலி நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்ளார்.
இதற்கிடையில் இப்படி ஒரு மோசடியான மனுவை தயாரித்து அனுப்பியது ஓமன் நாட்டில் அரசு துறையில் பயோ மெடிக்கல் இன்ஜினியர் ஆக வேலை பார்த்து தற்போது ஊர் வந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சார்ந்த முகமது அனஸ் என தெரிய வந்துள்ளதாம்.
தக்கலை ஞானமா மேதை பீர் முகம்மது ஒலியுல்லா தர்காவிற்கு ஹாஜி ஹசன் தலைமையில் 11 பேர் கமிட்டி தமிழ்நாடு வக்பு வாரியத்தால் நியமிக்கப்பட்டுள்ளதாம். இந்த கமிட்டிக்கு பெரும் இடையூறாக ஜாஹிர் அலி என்பவர் இருப்பதாகவும் இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
54/2023 என்ற குற்ற வழக்கில் இவர் நிபந்தனை ஜாமீனில் இருப்பவராம். தர்கா உண்டியல் திருட்டு சம்பந்தமாக இவர் மீது மூன்று புகார்கள் வக்பு வாரியத்தால் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவரது புதல்வர் தான் அந்த அவதூறு செய்தியை பரப்பிய முகமது அனஸ் என்பவராம்.
வக்பு வாரிய தலைமையின் மீது
ஏன் இந்த அவதூறு பரப்பப்பட்டுள்ளது என்பது இப்போது புரிகிறதா? இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

Comments
Post a Comment