ராகுல் காந்திக்கு எதிரான தீர்ப்பு : காங்கிரஸ் மேல்முறையீடு!

புதுடெல்லி: அடுத்த பிரதமர் என்று கருதப்படும் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி, மோடி சமூகம் பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என்று கூறி குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை சாக்காக வைத்து ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ளது - இது ஜனநாயக நாடா? சர்வாதிகார நாடா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. கருத்துச் சுதந்திரம் கேள்விக்குறி ஆகியுள்ளது. ராகுல் காந்தி மீதான புகார் வழக்கில் வேகமாக தீர்ப்பு வழங்கிய குஜராத் நீதிமன்றம், குஜராத் கலவரத்தில் பல்லாயிரம் சிறுபான்மையினர் பலி கொடுக்கப்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அன்றைய முதலமைச்சர் - இன்றைய பிரதமர் மோடிக்கு எதிராக எந்த தீர்ப்பும் - தண்டனையும் வழங்கவில்லை. மாறாக அவரை வழக்குகளில் இருந்து விடுவித்தது ஏன் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இந்த தீர்ப்பையும் எம்பி பதவி தகுதி நீக்கத்தையும் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் உள்பட எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மகாராஷ்டிரா உத்தவ் தாக்கரே, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ்
மேல்முறையீடு செய்துள்ளது.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!