கந்து வட்டியால் பாதிக்கப்படும் ஏழை முஸ்லிம்களுக்கு உதவிடுவீர்!

*இஸ்லாமிய சமூகத்திற்கு மனந்திறந்த ஒரு மடல்...!!* ******************
பேரன்புடையீர்...! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்ம..)! இஸ்லாமிய சமுதாயத்தில் பலர் தங்களது கணக்கில் வைத்திருக்கும் தொகைக்கு கிடைக்கும் வட்டியை வங்கியில் இருந்து எடுத்து எவ்வித பலனும் தனக்கும் - குடும்பத்தினருக்கும் எதிர்பாராமல் மற்றவர்களுக்கு அடிப்படை தேவையான கழிப்பறை கட்டுமானம் செய்திட தருவதையும், தங்களுக்கு தெரிந்த வட்டாரத்தில் இருப்போர் அடகு கடையில் ஏதேனும் நகைகள் அடகு வைத்திருந்தால் அதை மீட்க - அந்த வட்டி பணத்தை - வட்டி கட்டுவதற்கு தருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். மேலும் பலர் அந்தப் பணத்தை எடுப்பதே இல்லை, அந்த தொகை அவர்களின் கணக்கில் அப்படியே இருக்கிறது. தனது தொழில் / வேலை இவைகள் சரிவர அமையாத காரணத்தால் கஷ்டப்படும் சூழ்நிலையில் நமது சமூகமும் இருக்கிறது, அவர்கள் தன்னுடைய தேவைகளுக்கும், கவுரவம் - இது மிகவும் அவசியம் என்கிற நடுத்தர குடும்ப மக்களின் கோட்பாட்டிற்கும் ஆட்பட்டு கந்து வட்டி என்ற கொடிய வலையில் சிக்கிக் கொள்கிறார்கள். அவ்வாறு மாட்டிக் கொள்பவர்கள் அதிலிருந்து மீள முடியாமல் தொடர்ந்து வட்டி கட்டியே தங்களது காலத்தை - செல்வத்தை செலவிட்டு வருகிறார்கள். இதற்கிடையில் எதிர்பாராத மருத்துவ செலவினங்கள் உள்ளிட்ட இன்ன பிற தேவைகள் ஏற்படும் போது தொடர்ந்து அந்த கந்து வட்டியின் கொடிய பிடியிலிருந்து அவர்களால் மீளவே முடியவில்லை. அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்... ஒரு சிலர் இஸ்லாம் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட தவறான பாதையை தேர்ந்தெடுக்கவும் செய்கின்றனர். இந்த சூழ்நிலையில் நம்முடைய மக்களின் பணம் வங்கியில் அது வட்டி என்கிற காரணத்தால் அவரவர் கணக்கிலிருந்து அந்த தொகை எடுக்கப்படாமல் அதிக அளவில் வங்கியிலேயே இருக்கிறது. எனவே, அத்தகைய தனவந்தர்கள் உட்பட எளிய மக்களும் அந்த பணத்தை எடுத்து, எவ்வித நன்மைகளையும் எதிர்பார்க்காமல் எங்களை தொடர்பு கொண்டிருக்கும் - கந்து வட்டியால் ஏற்பட்டிருக்கும் இன்னல்களில் வதைப்பட்டு கொண்டிருக்கும் குடும்பத்தினருக்கு நேரடியாக தந்து உதவினால், கந்து வட்டியினால் எழும் சிக்கல்களில் இருந்து அவர்களை மீட்க நமக்கு பெரும் உதவியாக இருக்கும். இதில் *“நம்பகத்தன்மை ஏற்படுத்தும் வகையில் தொடர்புடைய அந்த தனவந்தர்கள் / கொடையாளர்கள் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு நேரடியாகவே வழங்கலாம்”.* விரும்பினால் எங்கள் மூலமாகவும் வழங்கலாம். இந்த நற்பணியில் நாம் - நம்முடைய அமைப்பு ஒரு பாலமாக மட்டுமே செயல்படு(வோ)ம். எனவே, இந்த புனிதமிகு ரமலான் மாதத்தில் இதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், சமூக சிந்தனையும், செல்வத்தையும் தந்தருள்வானாக... ஆமீன்... (*கவனத்திற்கு*: இது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட வட்டியை ஆதரிக்கும் செயல்பாடும் அல்ல. வங்கி வட்டி பணத்தை வேறு நற்காரியங்களுக்கு பயன்படுத்துவதற்கு ஊக்குவிக்கும் வேண்டுகோளும் அல்ல. இது முழுக்க முழுக்க கந்து வட்டியால் அல்லல்படும் குடும்பங்களை மீட்க மட்டுமே... ) தொடர்புக்கு.... *கலீல் பாகவீ - +965 9787 2482* - *கந்து வட்டியிலிருந்து காப்பாற்றுவோர் பேரவை (KVKP)*, பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டம்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!