ஸஹர் விருந்தில் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களுடன் திருமாவளவன் பங்கேற்பு!
சென்னை:
ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தில் குறிப்பிட்ட நாட்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி நோன்பு நோற்று வருகிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையில் உள்ள முஸ்லிம்கள் உடன் சஹர் உணவு அருந்தி இஃப்தார் நேரத்தில் நோன்பு திறந்து வருகிறார். ஏறக்குறைய 19 வருடங்களுக்கு மேலாக இதை தொடர்ந்து செய்து வருகிறார்.
அந்த அடிப்படையில் இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகளின் நிர்வாகிகள் உடன் சஹர் விருந்தில் திருமாவளவன் கலந்து கொண்டார்.
அண்மையில், சென்னையில் நடைபெற்ற சஹர் விருந்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி உடன் சஹர் உணவு விருந்தில் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச் செயலாளர் பேராசிரியர் சேமுமு. முகமதலி, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணை தலைவர் முஹம்மது முனீர் மற்றும் காஞ்சி மாவட்ட செயலாளர் அனஸ் ரஹ்மான்,
எஸ்டிபிஐ தெஹ்லான் பாக்கவி, மனித நேய மக்கள் கட்சி துணை பொது செயலாளர் தாம்பரம் யாக்கூப், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கட்சிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Comments
Post a Comment