அன்புளார் எழுக - வருக!
அருளன்பு எங்கும் நிறைக
அறமெலாம் பொலிக- வளர்க!
இருளெலாம் இங்கிருந் தகல்க!
இன்பங்கள்
நிறைந்து பெருக!
மருளெலாம் மாய்க!
தொலைக மயக்கங்கள் எல்லாம் கலைக! அருள்மிகும்
ரமலானோடு சித்திரை வருவ தாக... கொடுநோய்கள் மறைவதாக!
குறையெலாம் அகல்வதாக!
மிடுமைகள்
தொலைவதாக!
மேன்மைகள் பொலிவதாக!
அடிமைகள் கேடர் ஒழிக!
அன்புளார் எழுக வருக!
கொடுமைகள்
நீங்கியிந்த குவலயம் சிறப்பதாக... பாதையில் வெளிச்சம் வருக!
பாசிச இருண்மை தொலைக!
போதையின் கொடுமை ஒழிக
போர்களின் சத்தம் மாய்க!
மாதரார் மாண்பு மலர்க!
மதப்பகை பூசல்
அழிக!
ஆதார வாழ்வில் இன்பம் அனைவர்க்கும் இறைவன் அருள்க!
இனிய தமிழ் சித்திரை
வாழ்த்துக்கள்!
* - அத்தாவுல்லா

Comments
Post a Comment