கர்நாடகா : தடைகளைத் தாண்டி முஸ்லிம் மாணவி சாதனை!
*கல்லூரியில் புர்கா அணிய தடை விவகாரத்தில் அல்லாஹூ அக்பர் முழக்கம் மூலம் உலகப் ௭ெற்ற கர்நாடக மாநில மாணவி தபஸூம் ஷேக் கல்வியில் சாதனை படைத்துள்ளார்.
கர்நாடகப் பல்கலைக்கழகக் கல்வித் துறையால் நடத்தப்பட்ட PUC-II தேர்வில் 98.3% சதவீதம் பெற்று முதல் மதிப்பெண் பெற்ற மாணவி தபசும் ஷேக்கிற்கு வாழ்த்து குவிந்துவருகிறது. ஹிஜாப் விவகாரத்தில் பல தடைகளையும் எதிர்ப்புகளையும் தாண்டி தபசும் பெற்ற இந்த வெற்றி பெண்களுக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.
தடைகள் பல வரலாம் - தட்டிப்பறிக்கக் கூட்டமும் சில வரலாம், ஆனால் அதைக்கண்டு அஞ்சாமல் துணிந்து நிற்பேன் என்று தேர்வில் சாதித்த தபசும் ஷேக்கின் வெற்றி பலருக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
செய்தி: ஹமீது

Comments
Post a Comment