ரமலான் சிந்தனை : மக்களுக்கு சேவை செய்பவர்களுக்கு கிடைக்கும் நன்மை!
பொதுவாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுபவர்களை நாம் அதிக நன்மை அடைந்தவர்களாக கருதுவோம்.
*நோன்பு நோற்காமல் மக்களுக்கு சேவை செய்தவர்களை "நன்மையைத் தட்டிச் சென்றவர்கள்" என்று நபி (ஸல்) பாராட்டி அங்கீகரித்துள்ளார். எப்படி?
நபி (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அந்த பயணத்தில் வெயில் கடுமையாக இருந்தது. சிலர் நோன்பு நோற்றார்கள், சிலர் நோன்பை விட்டு விட்டார்கள்.
நோன்பு நோற்றவர்கள் எந்த வேலையும் செய்யவில்லை. நோன்பை விட்டவர்கள் தான் வாகன (ஒட்டக)ங்களை எழுப்பி, (தண்ணீர் புகட்டியும் தீனி போட்டும்) வேலை செய்தார்கள்; நோன்பாளிகளுக்கு (ஓய்வெடுக்க கூடாரம் அடித்தும்) பணி புரிந்தார்கள்.
இதை பார்த்த நபி (ஸல்) அவர்கள், ‘‘இன்று நோன்பு நோற்காதவர்கள் நன்மையைத் தட்டிச் சென்றுவிட்டனர்” என்று கூறினார்கள். ( புகாரி
2890)
*இஸ்லாத்தில் மற்ற மனிதர்களுக்கு சேவை செய்வதும் அதிக நன்மை பெற்று தரும் காரியம் தான்.*
*ஆக்கம் : S.சித்தீக் M.Tech*

Comments
Post a Comment