+2 தேர்வு : மாநிலத்தில் 2 ஆம் இடம்பெற்ற ஸப்ரின் இமானா!

+2 தேர்வு : மாநிலத்தில் 2 ஆம் இடம்பெற்ற சாதனை மாணவி பற்றிய விவரம் வருமாறு: + தேர்வில் முதலிடம் பெற்ற பெண்ணை பற்றிதான் எல்லாருக்கும் தெரியுமே! 600/ 600 எடுத்து சாதனை படைத்தவர். இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்த பெண்ணைப் பற்றியும் தெரிந்து கொள்வோம். தமிழகத்தில் இரு தினங்களுக்கு முன்னர் வெளியான + 2 தேர்வின் முடிவில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இக்பால் நகர் ஆமினா அம்மாள் தெருவைச் சேர்ந்த பெருந்தரகன் சிராஜ் மகள் மாணவி ஸப்ரின் இமானா 590/ 600 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாநில அளவில் தமிழ்வழிக் கல்வியில் கணித பாடத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். இவர் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் 100 மதிப்பெண்களும் கணித பாடத்தில் 99 மதிப்பெண்களும் பெற்று சாதனை புரிந்துள்ளார். எந்தக் கல்விப் பின்புலமும் இல்லாத சாதாரண எளிய குடும்பத்திலிருந்து கல்வி பயின்ற சாதனைப் பெண் ஸப்ரின் இமானா கடையநல்லூர் கல்வி வரலாற்றில் இதுவரை யாருமே செய்யாத ஒரு புதிய சாதனை மைல்கல்லை ஏற்படுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து. அவரை தமிழ்நாடு ஆளுநர் ரவி, கவர்னர் மளிகைக்கு அழைத்து வாழ்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார். நன்றி: வழுத்தூர் மக்கள் மீடியா - ஹமீது ஆர் எஸ் எம்

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!