2000 ரூபாயும் நாகரிக கோமாளியும்!
*இதுவரைக்கும் அச்சடிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 375 கோடி இருக்கும்.
*ஒரு நோட்டு அச்சடிக்க ஆன செலவு மட்டும் சராசரியாக 4 ரூபாய்.
ஆக மொத்தம் அச்சடிக்கிற செலவு மட்டும் 1500 கோடி ரூபாய்.
*இந்த நீளமான நோட்டை ஏடிஎம் மெசின்களில் அடுக்க முடியாததால் மெசின்களை மாற்றியமைக்க வேண்டி இருந்தது.
*நாட்டில் ஏடிஎம்கள் எண்ணிக்கை அப்போது சுமார் 2 இலட்சம்.
*ஒரு ஏடிஎம்மின் விலை சராசரியாக 7 இலட்சம் ரூபாய்.
மாற்றியமைக்க ஏடிஎம் விலையில் 10% ஆனது என்றால் மொத்த செலவு, கிட்டத்தட்ட 1400 கோடி.
*இது போக 15 இலட்சம் பொதுத் துறை, தனியார் துறை வங்கி ஊழியர்களுக்கு பயிற்சிக்கான செலவு,
*375 கோடி நோட்டுகளை நாடு முழுக்க லாரிகளில் கொண்டு சென்று விநியோகிக்க ஆன செலவு,
எல்லாவற்றையும் சேர்த்தால்,
*2000 ரூபாய் நோட்டுகளை அவசர கோலத்தில் அறிமுகப்படுத்தி, இப்போது திரும்பப் பெற்ற, மோடியின் கோமாளித் தனத்தினால்
ஆன மொத்த தண்ட செலவு
5000 கோடி ரூபாயைத் தாண்டும்!
*இது போக கள்ள நோட்டு ஒழிப்பு, கருப்பு பண ஒழிப்பு, மின்னணு வர்த்தகப் பரவலாக்கம் என எல்லா குறிக்கோள்களிலும் முற்று முழுவதுமாகத் தோற்ற, இந்திய நாட்டின் வரலாற்றிலேயே, மனிதனால் நிகழ்த்தப்பட்ட ஆகப்பெரிய பொருளாதார பேரழிவுத் தாக்குதலான பண மதிப்பிழப்பினால்,
பொருளாதாரம் 1.5% சுருங்கியதால், ஆண்டு ஒன்றுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு மட்டும்
2.50 லட்சம் கோடி ரூபாய்!
அதனால் ஏற்பட்ட வேலை வாய்ப்பு இழந்தவர்கள் 15
இலட்சம்.
இந்த, பொருளாதார அறிவு அறவே இல்லாத,
*முழு முட்டாள்களிடம் இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை இன்னும் ஒரு 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து கொடுத்தால்,
இந்தியாவில் இந்து ராஷ்டிரம் என்பது பஞ்சம், பட்டினி, கலவரம், வன்முறை, சாவு நிறைந்த சுடுகாடாகவே இருக்கும்.
இதை முன்பே சரியாக கணித்து நரேந்திரனை நாகரீகக் கோமாளி என்று விமர்சித்த கூகுள் நிறுவனத்திற்குப் பாராட்டுகள்.


Comments
Post a Comment