ஆவடி நாசர் நீக்கம் சரியா? - அச. உமர் பாரூக்

எஸ். டி. பி. ஐ. மாநில பொதுச் செயலாளர் அச. உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கை : திமுகவின் முரட்டு விசுவாசி, ஆவடியின் அடையாளம், தொண்டர்களின் தோழன் என கருதப்படும் ஆவடி நாசர் அமைச்சவையில் இருந்து நீக்கப்படுவதாக தெரிகிறது, அவருக்கும், மஸ்தானுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டதே அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் என்பதால்தான். ஆனால் அவர்கள் உண்மையிலேயே முஸ்லிம் சமுதாயத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்களா? என்றால்
இல்லவே இல்லை. அவர்கள் முஸ்லிம் என்பதைவிட திமுக தலைவர்களை மார்க்கம் மறந்து கொண்டாடக்கூடியவர்கள். இதனால் பல நேரங்களில் சமூகத்தின் வெறுப்பையும் கண்டும் காணாமல் கடந்தவர்கள் என்பது வேறு கதை, இருக்கட்டும் அது அவர்களுக்கும் அவர்களைப் படைத்த இறைவனுக்குமானது. சரி இப்போது அவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன ? நிர்வாகம் சரி இல்லையா ? ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஏதும் உள்ளனவா ? அல்லது தலைமையின் கட்டுப்பாட்டை மீறிவிட்டாரா ? அதனால்தான் இந்த நீக்கமா ? மேலே சொன்ன எதுவாக இருந்தாலும் நாம் இல்லை, இருக்காது, என்று சொல்லமாட்டோம், அவை நடந்திருக்க வாய்ப்புகள் அதிகம்தான். இது சார்ந்து எதற்கும் நாம் வக்காலத்து வாங்க மாட்டோம். முதல்வருக்கு அவர்களுக்கு நமது கேள்வி இதுதான்: உங்கள் அமைச்சரவையில் இதுபோன்ற அல்லது இதைவிட கூடுதலாக உங்களுக்கு குடைச்சல் தருபவர்கள் இல்லவே, இல்லையா ? அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுத்தால் அவர்கள் சார்ந்த சமூகமும், ஏன்? அவர்களுமே எதிர்வினையாற்றுவார்கள் என கருதுகிறீர்களா? எதற்கும் எதிர்வினையாற்றாத - எப்போதும் பாதுகாப்பான வாக்கு வங்கி உள்ளவர்கள் இவர்கள்தான் என கருதிவிட்டீர்களா ? என்பதுதான் நமது கேள்வி. பதில் உண்டா ? நாசர் ஊழல் செய்தார் என்றால், மற்றவர்கள் கக்கனாகவும், காமராசராகவும்,காயிதே மில்லத்தாகவும், இருந்தால் நன்று...!

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!