தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்க மாநில மாநாடு!
திருச்சி:
மே 18 ம் தேதி திருச்சி LKS மஹாலில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பாக மாநிலம் தழுவிய உயர்கல்வி மாநில மாநாடு நடைபெற்றது.
தமிழகம் முழுவதிலுமிருந்து 1500 மாணவ, மாணவிகளும் பெற்றோர்களும் சமுதாயப்புரவலர்கள்,
அறிஞர் பெருமக்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சியை ஏற்பாடு
செய்திருந்தார்கள்.
வருங்கால சந்ததிகளை சிறந்த தலைமுறையாக உருவாக்க வேண்டும்
என்ற உயர்ந்த நோக்கத்தில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஆலிம்களின் தாய்ச்சபையாம் ஜமாஅத்துல் உலமா சபை பொருளாளர் வாழ்த்துரை வழங்கினார்.
சமுதாயத்தில் பல தளங்களிலும் சேவை செய்து கொண்டிருக்கும் சமுதாய இயக்கங்களின் பொறுப்பாளர்கள் பலரும் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.
சட்டத்துறை,
ஊடகத்துறை,
வேளாண்மை,காவல்துறை போன்ற சில துறைகளைத் தேர்ந்தெடுத்து படிப்பவர்களுக்கு கல்விக் கட்டணம் உட்பட அனைத்து அடிப்படை செலவுகளையும்
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்து தரப்படும்
என்று அறிவிக்கப்பட்டது.
இந்த வாய்ப்பை சமுதாயம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின்
இருபது வருட கால உழைப்பு
சமுதாயத்திற்கு பல்வேறு பயன்களை வழங்கும்.




Comments
Post a Comment