கைத்தடியா? செங்கோலா?
*1947 ல் நம் நாடு சுதந்திரம் அடைந்த போது பிரதமர் நேருவிடம் பலர் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டனர் . சிலர் பரிசுப் பொருளை அவருக்கு வழங்கினர்.
*அப்படி நேருவிடம் 14/08/1947 ல் வழங்கப்பட்ட ஐந்து அடி நீளமான ஒரு தங்கக் கைத்தடியைத் தான் இப்போது சோழ மன்னர்களின் செங்கோல் என சங் பரிவார் ஆசாமிகள் புருடா விடத்துவங்கி விட்டனர்.
*அந்தக் காலத்தில் நேரு அவருக்கு கிடைத்த எல்லா பரிசுப் பொருட்களையும் அரசிடமே ஒப்படைத்து விட்டார் . அவருக்கு தமிழகத்தின் ஒரு ஆதீனத்தைச் சார்ந்தவர்கள் வழங்கிய தங்க கைத்தடியையும் அரசிடமே ஒப்படைத்து விட்டார்.*
*அது அலகாபாத் நகரில் ( தற்பொழுது பிரயாக் ராஜ் என பெயர் மாற்றப்பட்டது ) உள்ள நேரு நினைவகத்தில் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது. அதன் மேல் Walking Stick என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
*எனவே அது ஒரு சாதாரண கைத்தடி . சென்னையில் இருந்த பிரபல நகை வியாபாரிகளான உம்முடியார் சகோதரர்கள் 1947 ஆகஸ்ட் மாதம் தயாரித்த தங்க கைத்தடி எப்படி சோழ பேரரசில் மன்னர்கள் பயன்படுத்திய செங்கோலாக இருக்க முடியும் ? தமிழகத்தில் சோழர்களின் அரசாட்சிக் காலம் என்பது பதிமூன்றாம் நூற்றாண்டில் ( 1200 ஆம் ஆண்டுகளில் ) முடிந்து விட்டதாக வரலாறு பதிவு செய்துள்ளது.
*அப்படி இருக்க அதற்கு 700 ஆண்டுகளுக்குப் பிறகு 1947 ஆகஸ்ட் மாதம் ( இருபதாம் நூற்றாண்டில் ) சென்னையில் ஒரு தங்க வியாபாரியால் தயாரிக்கப்பட்ட கைத்தடியை சோழப் பேரரசின் மன்னர்கள் பயன்படுத்தியது என இரண்டே நாளில் இந்தியா முழுவதிலும் பொய்யை மக்களிடையே பொறுப்பில்லாத அடிமை ஊடகங்கள் மூலம் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பரப்பி வருகிறது*
*செங்கோல் என்ற வடிவத்தில் பண்டாரங்கள் தந்தது 'தர்ம தண்டம்". அது அறக்கோல் அல்ல!
*தண்டம் எப்போதும் மக்களை மடமையில் ஆழ்த்தி சுரண்டலுக்குத் துணை போகும்!
*ஆனால், அறக்கோல் என்பது துலாக்கோல் (தராசு) போல் "நடுங்காத நடுவு நிலைமை" கொண்டது. எப்போதெல்லாம் அறம்பிறழ்கிறதோ, அப்போதெல்லாம் அரசாள்வோரை எச்சரித்து, நீதி நெறி பிறழாமல் ஆட்சி நடத்த வழிகளைச் சொல்வது!
அறக்கோல் மக்களுக்கானது. தர்ம தண்டம் மடங்களுக்கானது!
*கண்ணகி நீதி கேட்டது அறக்கோல் கொண்ட நெடுஞ்செழியனிடம். அதனால்தான், "யானோ அரசன்? யானே கள்வன்!" என்று மன்னனே உயிர்துறந்தது!
*நந்தன் நீதி கேட்டது தர்ம தண்டம் சுமந்த வர்ணாசிரமவாதிகளிடம். அதனால் தான் அந்த சிவபெருமானே நந்தனை மறைத்த நந்தியைத்தான் "சற்று விலகி இரும் பிள்ளாய்!" என்று சொல்ல முடிந்ததே தவிர, "நந்தா! நீயே என் கருவறைக்குள் வா!" என்று சொல்ல முடியவில்லை!
*இனியும் செங்கோல் பெருமை பேசி, 2000 ரூபாய் நோட்டு மாற்றும் அவஸ்தையைப் போல பல அவஸ்தைகளை மறைக்க வேண்டாம்.
*மோடி பெற்றிருந்த மனு தர்ம தண்டம் மக்களுக்கானது அல்ல; அது வெறும் தண்டம்!
*நாம் எதிர்பார்ப்பது "தேரேறி இறந்த தன் கன்றுக் குட்டிக்காக நீதி கேட்ட தாய்ப் பசுவுக்கு... தன் மைந்தனையே தேர்க்கால் ஏற்றிக் கொன்று நீதிவழங்கிய மனுநீதிச் சோழன் பேணிக் காத்த அறக் கோலின் அறத்தை!
*எனவே, செங்கோல் அறக் கோலாக இருக்க வேண்டும்! மனுதர்ம தண்டமாக இருக்கக் கூடாது. இதுவே மக்களின் "மன் கி பாத்!"* *புரியுதா மோடி அரசே?
**
- தெருப் பாடகன்

Comments
Post a Comment