சுவாமிமலை - சென்னை இடையே அரசு பேருந்து சேவை!

சுவாமிமலை நகரிலிருந்து சென்னைக்கு கும்பகோணம், வடலூர், பண்ருட்டி, திண்டிவனம் வழியாக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து சேவை தொடக்க நிகழ்ச்சி சுவாமிமலை கீழ வீதியில் நடைபெற்றது. நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம். எச். ஜவாஹிருல்லா ஆகியோர் கொடியசைத்து பேருந்து சேவையை தொடக்கி வைத்து பொதுமக்களுடன் பயணம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் எஸ்.கே. முத்துச்செல்வம், சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, அரசு வழக்கறிஞர் பா.விஜயகுமார், சுவாமிமலை பேரூர் திமுக செயலாளர் எஸ்.எம்.எஸ். பாலசுப்பிரமணியன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தலைமை பிரதிநிதி வழக்கறிஞர் சரவணபாண்டியன், மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, மாவட்ட செயலாளர் முஹம்மது மைதீன், மாவட்ட பொருளாளர் பொகர்தீன், சுவாமிமலை பேரூர் தலைவர் புர்க்கான் அலி, மாவட்ட மகளிர் பிரிவு பொருளாளர் ஷபானா மற்றும் அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் உள்ளிட்ட அலுவலர்கள், திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!